பஞ்சபூதத் தலங்கள் - ஆகாயத்தலம் பகுதி 4

பஞ்சபூதத் தலங்கள் -    ஆகாயத்தலம்


சிதம்பரம் நடராசர் கோயில்சபைகள்


சித்சபை, கனகசபை, நடனசபை, தேவசபை, ராஜசபை ஆகிய ஐந்து சபைகள் சிதம்பரம் நடராஜர் கோயிலில் அமைந்துள்ளன. பேரம்பலம் என்பது தேவசபை என்றும், நிருத்த சபை என்பது நடனசபை என்றும், கனகசபை என்பது பொன்னம்பலம் எனவும் அறியப்பெறுகிறது.


பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன. இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 ஆயகலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாளங்களை குறிக்கின்றது.


பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,


தீர்த்தங்கள்


கோயிலில் சிவகங்கை, பரமானந்த கூபம், வியாக்கிரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகச்சேரி, பிரம தீர்த்தம், சிவப்பிரியை, புலிமேடு, குய்ய தீர்த்தம், திருப்பாற்கடல் ஆகிய தீர்த்தங்கள் அமைந்துள்ளன.  • பரமானந்த கூபம் - நடராசர் கோயிலின் கிழக்கில் அமைந்துள்ளது.

  • குய்யதீர்த்தம் - நடராசர் கோயிலின் வடகிழக்கே கிள்ளைக்கு அருகே அமைந்துள்ளது.

  • புலிமடு - சிதம்பரம் கோயிலின் தென் பகுதியில் அமைந்துள்ளது.

  • வியாக்கிரபாத தீர்த்தம் - நடராசர் கோயிலுக்கு மேற்கில் இளமையாக்கினார் கோயிலிக்கு எதிரே அமைந்துள்ளது.

  • அனந்த தீர்த்தம் - நடராசர் கோயிலுக்கு மேற்கிலுள்ள திருவனந்தேச்சுரத்துக்கு கோயிலில் அமைந்துள்ளது.

  • நாகச்சேரி - அனந்தேச்சுரத்துக்கு மேற்கில் அமைந்துள்ளது.

  • பிரமதீர்த்தம் - நடராசர் கோயிலுக்கு வடமேற்கே இருக்கும் திருக்களாஞ்சேரியில் கோயிலில் அமைந்துள்ளது.

  • சிவப்பிரியை - நடராசர் கோயிலுக்கு வடக்கே உள்ள பிரமசாமுண்டி கோயிலின் முன் அமைந்துள்ளது.

  • திருப்பாற்கடல் - சிவப்பிரியைக்கு தென்கிழக்கில் அமைந்துள்ளது.


=== மூலவர் தோற்றம்==மூலவர் திருமூலனாதர் சுயம்பு மூர்ட்தியாக அருல்பாலிக்கிரார்.


பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது


சிதம்பர ரகசியம்


இச்சபையில் சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ளது ஒரு சிறிய வாயில், அங்குள்ள திரை அகற்றபட்டு தீபாராதனை காட்டபடும். அங்கு திருவுருவம் இல்லாது, தங்கத்தால் ஆன வில்வ தளமாலை ஒன்று தொங்க விட பட்டிருக்கும்.


இதன் ரகசியம் இங்கு இறைவன் ஆகாய உருவில் இருக்கின்றார் என்பது தான்.ஆகாயத்துக்கு ஆரம்பமும் ,முடிவும் கிடையாது அதை உணரத்தான் முடியும் என்பதை உணர்த்துவதேயாகும்.


வழிபாடு


உலகில் உள்ள அனை்தது சிவகலைகளும் சிதம்பரம் நடராசர் கோயிலிருந்து காலையில் புறப்பட்டு, இரவில் மீண்டும் கோவிலை வந்தடைகின்றன (இதில் திருவாரூர் தியாகராஜா் சுவாமியயை) தவிர என்று நம்பப்படுகிறது. இதன் காரணமாக மற்ற சிவாலயங்களை விட தாமதமாக இக்கோவிலில் அர்த்த சாம பூசை நடைபெறுகிறது.


இவ்வாறு அனைத்து சிவகலைகளும் சிதம்பரத்தில் ஒடுங்குவதால் பல்வேறு தலங்களுக்கு சென்று வழிபடுவதற்கு சிதம்பரத்தில் நடைபெறும் அர்த்தசாம பூசையில் கலந்து கொள்வது ஈடானதாகக் கருதப்படுகிறது.


மூலவர்: திருமூலநாதர் (மூலட்டனேஸ்வரா்
சபாநாயகா்
கூத்தப்பெருமாள்
விடங்கா்
மேருவிடங்கா்
தட்சிணமேருவிடங்கா்
பொன்னம்பலகூத்தா்
தில்லைவனநாதா்
தில்லைநாயகா்
தில்லைவாசா்
கனகசபை
கனகசபாபதி
கனகரத்னம்
சபாரத்னம்
சபேசா்
அம்பலநாதா்
அம்பலவாணா்
அம்பலத்தரசா்
ஆடலரசா்
ஆடியபாதம்
கொஞ்சிதபாதம்
நடனசிவம்
நடனசபாபதி
நடராஜா்
நடேசமூா்த்தி
நடேஸ்வரா்
தாண்டவமூா்த்தி
தாண்டவராயா்
ஆனந்ததாண்டவா்
சிதம்பரநாதா்
சிதம்பரேஸ்வரா்


உற்சவர்: நடராஜா் (கனகசபைநாதா்)
தாயார்: உமையாம்பிகை (சிவகாமசுந்தாி)


நாளை  ஆகாயம் ஆலயம் ( பகுதி 5 ) தொடரும்இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.தென்னாடுடைய சிவனே போற்றி  எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றிஓம்  சிவாய நம  ஓம் சிவ சிவ ஓம்


அன்பே சிவம் - சிவமே அன்பு


திருச்சிற்றம்பலம்


ஆன்மீக வாழ்வுக்கு புராதன கோவில்கள் பற்றிய தகவல்கள் அவசியம்


நன்றி. 


பக்தியுடன்  மோகனா  செல்வராஜ்