4.5 லட்சம் மாணவர்களின் நிலை


ஊரடங்கு  நீட்டிக்கப்பட்டதால்பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த முடியாமல் போனது. , தேர்வை நடத்த முடியாது என்று கருதிய தமிழக அரசு இறுதியாண்டு செமஸ்டர் தவிர மற்ற செமஸ்டர் தேர்வுகளில் மாணவர்கள்  தேர்ச்சி பெற்றதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்


அமைச்சர் அன்பழகன் செமஸ்டர் தேர்வுக்கான  கட்டணத்தை மாணவர்கள் செலுத்தியிருந்தால், அவர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண் வழங்கப்பட்டு, அவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள்  என்று தெரிவித்து இருந்தார்.


இதனால், மாணவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி அகில இந்திய தொழில்நுட்ப  கல்வி கழகத்தின் தலைவர் அனில் சஹஸ்ரபுதே அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பாவுக்கு ஒரு கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது.


அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குவதை ஏற்க  முடியாது என்று ஏஐடிசிஇயிடம் இருந்து கடிதம் வரவில்லை என்று அமைச்சர் கூறி வந்த  நிலையில் அண்ணாபல்கலைகழகத்துக்கு ஏஐடிசிஇ எழுதிய கடிதம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அந்த கடிதத்தில், ‘‘தமிழகத்தில் தேர்வு எழுதாமலேயே மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக, அறிவித்ததாக எங்களுக்கு  தெரிய வந்துள்ளது. இதை  ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த மாணவர்களுக்கு திரும்ப தேர்வு நடத்த வேண்டும்’’ என்று கூறியிருந்ததாக தகவல்கள் வெளியானது.


‘‘அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குவதை ஏற்க  முடியாது. தேர்வின்றி தேர்ச்சி பெறும் மாணவர்களை தொழில் நிறுவனங்கள் ஏற்காது.  பல்கலையின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்’’ என்று அதில் கூறப்பட்டுள்ளது


அண்ணா பல்லைக்கழகம் அல்லது ஏஐசிடிஇயிடம் அனுமதி பெறாமல், தமிழக அரசு அறிவித்திருப்பது, அறிவிப்பு வெளியிட்டுள்ள முதல்வர் எடப்பாடி  பழனிச்சாமியின் உத்தரவையும் கேலிக்கூத்தாக்கியுள்ளதா?


* 4.5 லட்சம் மாணவர்களின் நிலை தற்போது திரிசங்கு நிலையில் உள்ளதால், அவர்களின் வாழ்க்கைக்கு உத்தரவாதம் கொடுப்பது யார்?
* கொரோனா பாஸ் மாணவர்களுக்கு வேலை தர பல நிறுவனங்கள் மறுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு யார் பொறுப்பு?
இவ்வாறு பல்வேறு கேள்விகளை மாணவர்களும், பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் எழுப்பியுள்ளனர். இதற்கு அரசுதான் பதில் அளிக்க வேண்டும்  என்று கோரிக்கையும் தற்போது எழுந்துள்ளது.