பிக்பாஸ் 4 வது சீசன் ஒளிபரப்பு தேதி அறிவிப்பு


தமிழில் பிக் பாஸ் 3 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் நான்காவது சீசன் தற்போது தொடங்கப்படவுள்ளது.


கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்த வாய்ப்பு இல்லை என்று பலரும் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் அண்மையில் பிக்பாஸ் நான்காவது சீசனுக்கான புரோமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது.


இந்நிலையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பல பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் தற்போது விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பு செய்யப்படும் என்ற அதிகாரப்பூர்வ தேதியை அறிவித்து உள்ளது.


அதன்படி வருகின்ற அக்டோபர் மாதம் 6 தேதி மாலை 6 மணி யிலிருந்து பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த பிக்பாஸ் 4 வது சீசனில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் பற்றிய தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.