தமிழக சட்டப்பேரவைக் கூடுகிறது


 


இன்று தொடங்குகிறது சட்டப்பேரவை கூட்டம்.. கொரோனா பாதுகாப்பு உடையுடன் பயணித்த அமைச்சர்!


பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சட்டப்பேரவை இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளது. சட்டப்பேரவை விதிகளின் படி ஆண்டுக்கு 2 முறை, 6 மாத இடைவெளியில் கூட்டம் நடத்தப்பட வேண்டும். வழக்கமாக பிப்ரவரியில் நிதிநிலை அறிக்கை தாக்கல் மற்றும் மே, ஜூன் மாதங்களில் மானியக்கோரிக்கை விவாதம் நடத்தப்படும். அதன்பிறகு 6 மாதங்களுக்கு பிறகு ஜனவரியில் ஆளுநர் உரை நிகழ்த்துவார். ஆனால், கொரோனா தொற்று காரணமாக சட்டப்பேரவை கூட்டம் கடந்த மார்ச் 24ம் தேதியுடன் அவசரமாக முடித்து கொள்ளப்பட்டது. 


கலைவாணர் அரங்கத்தில் சட்டப்பேரவை கூட்டம் முதன்முதலாக நடத்த முடிவு செய்யப்பட்டது. 1000 பேர் அமரக்கூடிய கலைவாணர் அரங்கத்தில் இரண்டாவது தளத்தில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மூன்றரை மீட்டர் இடைவெளியில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.