எம்ஜிஆர் இடத்தை விஜயால் நிரப்ப முடியாது- அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை:



செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன் என்று அன்போடு அழைக்கப்படும் திரு. வ.உ.சிதம்பரம் அவர்களின் 146_வது பிறந்த நாளான இன்று தமிழக  அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 


“கப்பலோட்டிய தமிழன்” வ.உ. சிதம்பரம் பிள்ளையின் பிறந்தநாளான இன்று அவரது உருவப்படத்திற்கு அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.



 அப்போது எம்ஜிஆரை போல நடிகர் விஜயை சித்தரித்து ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியது பற்றிய நிருபர்களின் கேள்விக்கு  மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:



* எம்ஜிஆர் இடத்தை நடிகர் விஜயால் நிரப்ப முடியாது. எம்ஜிஆர், ஜெயலலிதா இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.


* கூட்டணி குறித்து அமைச்சர்கள் பேசக்கூடாது என பாஜக தலைவர் எல்.முருகன் எங்களுக்கு கட்டளையிட முடியாது. கூட்டணி தர்மத்தை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். நாங்கள் கூட்டணி தர்மத்தை தொடர்ந்து கடைப்பிடிக்கிறோம்.


* இடைத்தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளது.


* அரசின் நிர்வாக காரணங்களால்தான ராமநாதபுரம் எஸ்.பி.வருண்குமார் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.


* பாஜகவின் அழுத்தம் காரணமாக காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டதாக கூறுவது தவறு. எந்த அழுத்தமும் தங்களை நிர்பந்திக்க முடியாது.


* வெளியே வந்தாலும் சசிகலாவின் தலையீடு அதிமுகவில் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு.


இவ்வாறு அவர் கூறினார்.