கடன் வாங்கியவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் உச்சநீதிமன்றம் கடன் தவணை (EMI) சலுகை திட்டத்தை செப்டம்பர் 28 வரை நீட்டித்துள்ளது.
கொரோனா ( Corona) தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதற்காக நாடு தழுவிய அமல்படுத்தப்பட்ட பிறகு, வர்த்தக நடவடிக்கைகள் முடங்கியதை அடுத்து, கடன் வாங்குபவர்களுக்கு கடன் தவணை சலுகையை வழங்கியது. பின்னர் மார்ச் மாதத்தில், மூன்று மாதங்கள் கடன் தவணை சலுகையை வழங்கி இந்திய ரிசர்வ் வங்கி (Reserve bank of India) அறிவிப்பை வெளியிட்டது. பின்னர் மேலும் மூன்று மாதங்கள் நீட்டிக்கப்பட்டு, ஆகஸ்ட் 31 ஆம் தேதி இந்த திட்டம் முடிவடைந்தது.
தற்போது, உச்சநீதிமன்றம் கடன் தவணை சலுகை திட்டத்தை செப்டம்பர் 28 வரை நீட்டித்துள்ளது.
கோவிட் -19 நோய் பரவலால், அறிவிக்கப்பட்ட கடன் தவணை சலுகை தொடர்பாக, தவணை சலுகை அளிக்கப்பட்ட கால கட்டத்தில் கட்டப்படாத கடன் தவணைக்கு (EMI) வட்டி வசூலிக்கும் நடவடிக்கையை மறுஆய்வு செய்யுமாறு உச்ச நீதிமன்றம் முன்பு மத்திய அரசு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியை (Reserve bank of India) கேட்டுக் கொண்டது.
மத்திய அரசும், ரிசர்வ வங்கியும் இது தொடர்பான உறுதியான முடிவை விரவில் எடுக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.