கொரோனா தொற்று செய்திகள்

 கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த மூத்த ஊடகவியலாளரும், திரைப்பட நடிகருமான ஃப்ளோரன்ட் சி. பெரேரா காலமானார்.இவர் என்கிட்டா மோதாதே (2017), வேலையில்லா பட்டதாரி 2 (2017),ராஜா மந்திரி, தொடரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.


பல வருடங்களாக ஊடகத்துறையில் பணியாற்றி வந்த பெரேரா, கலைஞர் தொலைக்காட்சியின் பொது மேலாளராக தற்போது பணியாற்றி வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்குப் முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர், சிகிச்சை பலன் இன்றி இன்று உயிரிழந்தார்.


_____________________


கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அதிமுக எம்.எல்.ஏ. கீதாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று அவரது உதவியாளருக்கு கொரோனா உறுதியானதால் இன்று பரிசோதனை செய்ததில் எம்எல்ஏவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.


_--------------------------------------


 கொரோனா மொத்த பாதிப்பில் ரஷ்யாவை முந்தியது மகாராஷ்டிரா மாநிலம். ரஷ்யாவில் மொத்த கொரோனா பாதிப்பு 10,68,320; மகாராஷ்டிராவில் 10,77,374 ஆக உள்ளது.


அதே போல கொரோனா மரணங்களில் ஸ்பெயினை முந்தியது மகாராஷ்டிரா. ஸ்பெயினில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 29,848; மகாராஷ்டிராவில் 29,894