இன்றைய ராசி பலன்கள் (21/09/2020)

 மேஷம் : சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும். இன்று பதட்டம் காணப்படும். முன்னேற்றம் தாமதமாக ஏற்படும். இதனால் கவலை ஏற்படும்.


ரிஷபம் : இன்று எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். உங்கள் புத்தி மூலம் வெற்றி பெறுவீர்கள்.மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. விலை உயர்ந்தபொருட்கள் வாங்குவீர்கள்.


மிதுனம் : இன்று உங்கள் இலக்குகளில் வெற்றி பெறுவதற்கு உகந்த நாள். புதிய தொடர்புகளை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளலாம். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள்.


கடகம் : முக்கிய விஷயங்களை இன்று தொடங்குவதற்கு சிறந்த நாள் அல்ல. பிறருடன் பேசும் போது கவனம் சேவை. பிரார்த்தனை மூலம் அமைதி பெறலாம். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை குறையும்.


சிம்மம் : இன்று உணர்ச்சிவசப்படலாம். இதனால் தன்னம்பிக்கை இழக்க நேரிடும்.எதிர்ப்புகள் அடங்கும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள்.வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.


கன்னி : இன்று உங்கள் அக்கம்பக்கதினர்கள் ஆதரவாக இருப்பார்கள். இது உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். முக்கிய முடிவுகள் இன்று பலனளிக்கும்.குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்று கொள்வார்கள். சொத்து பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்


துலாம் : இன்று வெற்றி பெறுவதற்கு திட்டமிட வேண்டியது அவசியம். முக்கிய முடிவுகள் தவிர்க்கவும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். அழகும் இளமையும் கூடும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.


விருச்சிகம் : இன்று திருப்தி குறைந்து காணப்படும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும்.


தனுசு : இன்று மந்த நிலை காணப்படும். ஆன்மீக ஈடுபாடு திருப்தியை கொடுக்கும். விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தை பற்றிய கவலைகள் வந்து நீங்கும். திடீர் பயணங்கள் மற்றும் செலவுகளால் திணறுவீர்கள்.


மகரம் : இன்று உங்களிடம் தன்னம்பிக்கை காணப்படும். ஸ்திரமான முடிவுகள் வெற்றிக்கு வழி வகுக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள்.


கும்பம் : இன்று உங்கள் இனிய வார்த்தை உங்கள் நெருங்கிய உறவுகளை மகிழ்ச்சி அடையச்செய்யும். உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.  உணர்ச்சிவசப்பட்டு பேசுவதை விட்டு அறிவுப்பூர்வமாக செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள்.


மீனம் : இன்று கவலையுடன் காணப்படுவீர்கள். உங்கள் வளர்ச்சியில் தாமதங்கள் காணப்படும்.குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள்.