ஐபிஎல் டி20 சிஎஸ்கே வெற்றி


ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில்  நடந்த 13-வது சீசன் ஐபிஎல் டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றதை பேட்ட படத்தின் வசனத்தை பதிவிட்டு சிஎஸ்கே வீரர் இம்ரான் தாஹிர்  கொண்டாடியுள்ளார்.


13-வது ஐபிஎல்டி20 சீசன் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில்  தொடங்கியது. அபுதாபியில்  நடந்த முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்கடித்தது.


அதுமட்டுமல்லாமல், சிஎஸ்கே அணிய கடந்த 3 ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தைச் சந்தித்து அதில் அனைத்திலும் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.ரஜினி காந்த்தின் பேட்ட படத்தின் வசனங்களை பதிவிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.


அதில் “ திரும்பவும் நீ எங்களை(சிஎஸ்கே) தொட்டுரக் கூடாது. தொட்டுட்டா தொட்டவன நாங்க விட்டதே இல்லை. இப்ப தானே காளியோட ஆட்டமே ஆரம்பமாகி இருக்கு. இன்னும் நிறைய சிறப்பான தரமான சம்பவங்கள்! காத்துகிட்டு இருக்கு #எடுடா வண்டிய போடுடா விசில் “ எனப் பதிவிட்டுள்ளார்.