சொத்துவரி செலுத்தத் தவறினால் 2% தண்டத் தொகை


சென்னை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சொத்து வரியை சரியான காலத்தில் செலுத்தி 5 சதவீதம் ஊக்கத்தொகை பெறலாம் எனவும், சொத்து வரியைச் சரியான காலத்திற்குள் செலுத்தத் தவறும் பட்சத்தில் ஆண்டுக்கு 2% தண்டத் தொகை செலுத்த நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


ஏற்கனவே சென்னையில் கொரோனா பாதிப்பால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்து உள்ள நிலையில் சொத்து வரியைச் சரியான நேரத்தில் தவறும்  பட்சத்தில் ஆண்டுக்கு 2% தண்டத் தொகை செலுத்த நேரிடும் என்ற அறிவிப்பு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.