நடிகை ராகினி திவேதி கைது: போதை பொருள் போலீஸ் நடவடிக்கை

 போதை கும்பலுடன் ெதாடர்புடைய வழக்கில் கன்னட நடிகை ராகினி திவேதி 05.09.2020  காலை  பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.


போதை பொருள் விவகாரத்தில் கைதான நடிகை ராகினி, தமிழ் திரைப்படங்களான ஜெயம் ரவி நடித்த நிமிர்ந்து நில், அறியான் ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


கர்நாடகா மாநிலம் பெங்களூரு மாநகரில் கடந்த வாரம் போதை பொருட்கள் கடத்திய புகாரில் அனிதா என்ற இளம்ெபண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கன்னட திரையுலகில் உள்ள பல நட்சத்திரங்கள், இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட பலருக்கு போதை பொருட்கள் விற்பனை செய்து வருவதாக கூறியிருந்தார்.


இதனிடையில் பத்திரிகையாளரும் திரைப்பட தயாரிப்பாளருமான இந்திரஜித் லங்கேஷ், பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் கொடுத்த புகாரில் 15 முன்னணி நடிகர், நடிகைகள் போதை பொருள் பயன்படுத்துவதாகவும் பலருக்கு போதை பொருள் விற்பனை செய்யும் மாபியா கும்பலுடன் தொடர்பு இருப்பதாக  தெரிவித்திருந்தார்.


நடிகை ராகினி கைது செய்யப்பட்ட சம்பவம் கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் சிசிபி போலீசாரிடம் இந்திரஜித் கொடுத்துள்ள 15 நடிகர், நடிகையர் பட்டியலில் பெயர் உள்ளவர்களும் அச்சத்தில் உள்ளனர். இன்று மாலைக்குள் மற்றொரு நடிகையாக சஞ்சனா கல்ராணியை சிசிபி போலீசார் கைது செய்யும் வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது