மணத்தக்காளி வற்றல் குழம்பு

மணத்தக்காளி வற்றல் குழம்பு


நம் அன்றாட உணவில் கட்டாயம் இடம்பெறுவது குழம்பு. ``தினமும் குழம்பு சாதமா?’’ என்று உதடு பிதுக்குபவர்கள்கூட, அதில் சுவையும் மணமும் தூக்கலாக இருந்தால். `ஒன்ஸ்மோர்’ கேட்டு `அடுத்த ரவுண்ட்’டுக்கு தயாராகிவிடுவார்கள். கைப்பக்குவத்தில்தான் இருக்கிறது சூட்சுமம்.தேவையானவை

  • நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன். 
செய்முறை:


முதலில் புளியை கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவேண்டும் 


வாணலியில் எண்ணெய் விட்டு பின்பு கடுகு, வெந்தயம், ஆகியவற்றை நன்றாக வறுத்து பின்னர் பூண்டு, கறிவேப்பிலை, உப்பு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி பின் மிளகாய்த்தூள், மஞ்சள்த்தூள் சேர்த்து வதங்கிய  பிறகு, மணத்தக்காளி வற்றலையும் போட்டுக் கிளறி, புளிக்கரைசலை ஊற்றி, உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். 


பின்னர் கறிவேப்பிலை, கொத்த மல்லி வதக்கியோ, பச்சையாகவோ  தூவி இறக்கவும்.


பிறகு 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து இறக்கவும். சுவையான மணத்தக்காளி வத்தல் குழம்பு தயார் 


காய்கறிகள் கைவசம் இல்லாத சமயத்தில், இந்தக் குழம்பு கை கொடுக்கும்.


உங்களது வீட்டில்  மணத்தக்காளி வத்தல் குழம்பு செய்து அனைவரையும் அசத்திடுங்கள்


இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் சமையல்  பயணம் தொடரும்.


வணக்கம் அன்புடன் கார்த்திகா