மஹாளய அமாவாசை  17.09.2020
மஹாளய அமாவாசை 

 


 

நம் வீட்டிற்கு வரும் விருந்தினர்களை வரவேற்று நாம் அவர்களுக்கு விருந்து கொடுப்போம். அதுபோல பித்ரு லோகத்தில் இருந்து நம்மை காண வரும் முன்னோர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று அவர்களுக்கு நாம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

 


சென்னை: மஹாளய அமாவாசை தினத்தன்று நம் பித்ருக்கள் அனைவரும் சூரிய சந்திர உலகத்துக்கு வருவதால் அனைத்து உறவினர்களுடைய சந்திப்பும் நிகழ்கிறது. 

 


நம் முன்னோர்களுக்கு விருப்பமான இடம் நம் இல்லம் தானே, எனவே அவர்கள் மஹாளய பட்சமான பதினைந்து நாட்களும் முன்னோர்கள் நம் இல்லத்தில் வந்திருப்பதாக நம்பிக்கை.

 

இந்த பதினைந்து நாட்களும் நம் வசிப்பிடத்தை சுத்தமாக வைத்திருந்து நம் முன்னோர்களை வணங்கி வந்தால் நம் வாழ்க்கை விருத்தியடைவது உறுதி.

ஏழைகளுக்கு தானம் கொடுக்க வேண்டும் அன்னதானம் செய்ய வேண்டும் இதன் மூலம் நம் பித்ருக்கள் மகிழ்ச்சியடைந்து நம்மை ஆசிர்வாதம் செய்வார்கள். 

இதன் மூலம் எத்தகைய தோஷங்கள் இருந்தாலும் நீங்கும்.

 


சுபகாரியத் தடை, மகப்பேறின்மை, தொடரும் விபத்துக்கள், தீராத நோய் இவற்றுக்கெல்லாம் பித்ரு தோஷமும் ஒரு முக்கிய காரணமாகும்.

 

பித்ரு தோஷத்தினால் அவதிப்படுபவர்கள் இந்த மஹாளய புண்ணிய காலத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வதன் மூலம் பித்ரு தோஷம் நீங்கி முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.


 

நாளை  17.09.2020  மஹாளய அமாவாசை தினமாகும். இந்த நாளில் நாம் தானம் செய்தல் நம் தலைமுறை மட்டுமல்லாது மூன்று தலைமுறைக்கும் புண்ணியம் சேரும்.மஹாளய அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மிகச் சிறப்பான நாளாகும். இந்த நாளில் நாம் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள் என்ன என்பதைப் பார்ப்போம்.

 

அமாவாசை தினம் என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்க மிக உகந்த உன்னதமான நாள்.

 

இந்த ஆண்டு மகாளய அமாவாசை புரட்டாசி முதல்  தினத்தில் வருவது மிகவும் விசேஷமாகப் பார்க்கப்படுகின்றது.

மஹாளய பட்சம் எனும் 15 நாட்கள் கொண்ட இந்த புண்ணிய தினத்தின் இறுதியில் வருகின்றது மகாளய அமாவாசை. பட்சம் என்பது 15 நாட்கள் கொண்ட கால அளவை குறிப்பதாகும்.

 

மகாளய பட்சம் என்பது ஆவணி மாதம் பெளர்ணமிக்கு பின்னர் வரும் 15 நாட்களைக் குறிப்பதாகும்.

 

நாளை 17 ம் தேதி மஹாளய அமாவாசை தினம் கடைபிடிக்கப்படுகிறது.


மஹாளயத்தை மறக்காதீங்க

 

எனவேதான் இந்த நாட்களில் அவர்கள் பசியாற அன்னமாகவோ அல்லது எள்ளும் தண்ணீருமாகவோ தர்ப்பணம் அளிக்க வேண்டும் என்கிறார்கள். அவர்களும் அதன் மூலம் திருப்தியடைந்து, நமக்கு அருளாசி வழங்குகின்றனர்.

 


பலரது பிறந்த ஜாதகப்படி,பலவித யோகங்கள் இருந்தாலும்,கடன், நோய், கஷ்டநஷ்டங்கள் அல்லது மீளாத பிரச்னைகளில் மாட்டுதல் இவற்றில் ஏதாவது ஒன்று அல்லது ஒன்றிற்கும் மேற்பட்டவைகளால் துன்பப்படுபவர்கள் தர்ப்பணம் செய்வதன் மூலம் அனைத்து கஷ்டங்களிலிருந்தும் விடுபடலாம்.

நோயற்ற வாழ்வினை வழங்குகிறார்கள். தாய், தந்தையர் இறந்த தினத்தில் சிரார்த்தம் செய்யாதவர்கூட, மறக்காமல் மஹாளயத்தை அவசியம் செய்ய வேண்டும்
முன்னோர்களுக்குப் படையல்:

 

ஒரு புரட்டாசி அமாவாசையன்று அன்னதானம் செய்தால், பதினான்கு ஆண்டுகள் பித்ரு தர்ப்பணம் செய்தமைக்கான புண்ணியம் நம்மை வந்து சேரும்.

 

மஹாளய தினத்தில் நம் முன்னோர்களுக்கு பிடித்தமான சைவ உணவுகளை ஆக்கிப் படைத்து அவர்களை மகிழ்வித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவதாக அமைகின்றது.

 

படைத்த உணவின் சிறு பகுதியை மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் உணவாக கொடுப்பதும், மிகுதியை, உற்றார், உறவினர்களுடன் பகிர்ந்து உண்பதும் மஹாளய அமாவாசையின் சிறப்பாகும்.

 

இந்த நாளில் நம் முன்னோர்களுக்கு கொடுக்கும் தர்ப்பணம் மூலம் நமது மூன்று தலைமுறைக்கும் ஆசியை பெற்றுத்தரும்.

வசதியுள்ளவர்கள் ராமேஸ்வரம் முதலான புனித ஸ்தலங்களில் செய்யலாம். சராசரி மக்கள் தமது சொந்த ஊரில் இருக்கும் எந்தக்கோவில் வாசலிலும் தானம் செய்யலாம்.

 

அயல்நாடுகளில் இருப்போர் அனாதை இல்லங்களில் செய்யலாம்.

 

இது எதுவும் முடியாதவர்கள்,நமது ஊரில் அல்லது நமது வீட்டின் அருகில் அல்லது நமது ஊரில் இருக்கும் பழமையான கோவிலில் இருக்கும் பசுவுக்கு ஆறு வாழைப்பழங்கள் அளிக்கவேண்டும்.

 

தந்தை இருக்கும்போது மகன் பித்ரு காரியங்கள் செய்யக்கூடாது. 

 

பசுவுக்கு அகத்திக்கீரை, பழங்கள் இவற்றை வாங்கித் தரலாம்.


 இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும். 


நன்றி. 


பக்தியுடன்  மோகனா  செல்வராஜ்