அறிஞர் அண்ணா( 15/09/2020) ஒரு கண்ணோட்டம்

அறிஞர் அண்ணா  (C. N. Annadurai, 15 செப்டம்பர், 1909 – 3 பெப்ரவரி, 1969)



வகித்த பொறுப்புகள்


மே 1956 இல் திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற திமுக மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி அண்ணாதுரை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகி வி.ஆர்.நெடுஞ்செழியனை அப்பொறுப்பில் நியமித்தார். அம்மாநாட்டில் நிறைவேற்றபட்ட தீர்மானத்தின்படி இந்தியப் பொதுத்தேர்தலில் போட்டியிட முடிவெடுத்து தேர்தலில் பங்குகொண்டது.


1957 ல் நடைபெற்ற தேர்தலில் திமுக போட்டியிட்டு 15 சட்டமன்றத் தொகுதிகளையும் இரண்டு நாடாளுமன்றத்தொகுதிகளையும் வென்றது. அண்ணாதுரையும் காஞ்சிபுரத்தில் போட்டியிட்டு  சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார்.[8]. திமுக முதல் முறையாக மதராஸ் மாநில சட்டமன்றத்திற்குள் நுழைந்தது.


1962 இல் திமுக மிகப்பெரியக் கட்சியாக காங்கிரசை அடுத்து உருவெடுத்திருந்தது. அப்பொழுது நடைபெற்றத் தேர்தலில் திமுக 50 சட்டமன்றத் தொகுதிகளில் வென்றது. அண்ணாதுரை அத்தேர்தலில் தோல்வியுற்றார். பின் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கபெற்று அண்ணா மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றினார். 1967 ல் நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றுத் தமிழ்நாட்டின் முதலமைச்சரானார்.


தமிழ்நாடு பெயர் மாற்றம்


1967 இல் நடைபெற்ற தேர்தலில் பங்கு பெற்ற திமு கழகம் வெற்றி பெற்று முதன் முறையாக திராவிட ஆட்சியை தமிழகத்தில் அமைத்தது. அவரது தலைமையில் 1967 மார்ச் 6இல் அமைந்த அமைச்சரவை இளைஞர்களை கொண்ட அமைச்சரவையாக விளங்கியது.


ஆட்சி பொறுப்பை ஏற்றதும் சுயமரியாதைத் திருமணங்களை சட்டபூர்வமாக்கி தனது திராவிடப் பற்றை உறுதிப்படுத்தினார். இரு மொழி சட்டங்களை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) உருவாக்கி முந்தைய அரசின் மும்மொழித்திட்டத்தினை (தமிழ், இந்தி, ஆங்கிலம்) முடக்கினார்.


மேலும் மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தை 1967 ஏப்ரல் 16 இல் தமிழ்நாடு என்று பெயர் மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார்.


அமெரிக்கரல்லாத அண்ணாதுரை அவர்களுக்கு யேல் பல்கலைக்கழகம், சப் பெல்லோசிப் என்ற கவுரவ பேராசிரியர் விருது 1967-1968 இல் வழங்கப்பட்டது. அமெரிக்கரில்லாத ஒருவருக்கு வழங்கப்பட்டதும் இதுவே முதல் முறை


இலக்கிய பங்களிப்புகள்


அண்ணாதுரை மிகச் சிறந்த தமிழ் சொற்பொழிவாளரும், மேடைப் பேச்சாளரும் ஆவார்[10]. தமிழில் சிலேடையாக, அடுக்கு மொழிகளுடன், மிக நாகரிகமான முறையில், அனைவரையும் கவர்கின்ற வகையில் தனிக்குரல் (கரகரத்த குரலில்) வளத்துடன் பேசும் திறன் பெற்றவர். எழுத்தாற்றலும் பெற்றவர்.


பல புதினங்களும், சிறு கதைகளும் மற்றும் அரசியல் நாடகங்களுக்கும் நாடகமாக்கம், திரைக்கதைகள் எழுதியவர்[10]. அவரே கதாபாத்திரமேற்று நாடகங்களில், திராவிடர் கழக பிரச்சார நாடகங்களில் நடித்துள்ளார்[39].


திரைப்படங்களை முக்கிய பிரச்சார ஊடகங்கங்களாக அரசியலுக்காக பயன்படுத்தியவர் அண்ணாதுரை. இவரின் முதல் திரைப்படம் நல்லதம்பி (1948). இதில் முக்கிய கதாபாத்திரத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நடித்துள்ளார்.


இது ஜமீன்தாரி ஒழிப்புமுறையை வலியுறுத்தி எடுக்கப்பட்டத் திரைப்படமாகும். இவரின் வேலைக்காரி (1949), ஒர் இரவு ஆகிய நாடகங்களும் தாய் மகளுக்குக் கட்டிய தாலி, ரங்கோன் ராதா, வண்டிக்காரன் மகன் ஆகிய கதைகளும் திரைப்படமாக எடுக்கப்பட்டன. திராவிட அரசியலின் பிரச்சாரமாக இத்திரைப்படங்கள் திகழ்ந்தன[40].


வேலைக்காரியில் அண்ணாதுரை அடக்குமுறையை கையாளும் நிலச்சுவான்தாரர்கள் ஜவஹர்லால் நேரு மற்றும் காந்தியுடன் எப்படி கூட்டணி வைத்துள்ளார்கள் என்பதை விளக்குகின்ற விதமாக எடுத்துக்காட்டப்பட்டது.


இவரின் திரைப்படங்கள் பெரும்பாலும் பிராமண எதிர்ப்பு மற்றும் காங்கிரஸ் எதிர்ப்பு பிரச்சாரங்களாக விளங்கின. இப்பிரச்சாரங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் நாடகமேடை கலைஞர்கள் மற்றும் திரைக் கலைஞர்களாக அண்ணாதுரைக்கு பக்கபலமாக விளங்கியவர்கள், டி.வி. நாராயணசாமி, கே. ஆர். ராமசாமி, என்.எஸ்.கிருஷ்ணன், எஸ். எஸ். ராஜேந்திரன், சிவாஜி கணேசன், மற்றும் எம்.ஜி.ராமச்சந்திரன்.


அண்ணாவின் சில நூல்கள் மிகுந்த சர்ச்சைகளை உருவாக்கியவை. அவற்றில் ஆரிய மாயை (ஆரியர்களின் போலித்தோற்றம்) பிராமணர்களை கடுமையாகச் சாடியதாக விமர்சிக்கப்பட்டது.


ஆரிய இனச்சேர்க்கை, திரைமறைவுகளை உருவகப்படுத்தும் விதமாக எழுதபட்டிருப்பதாக விமர்சனம் வைக்கப்பட்டது. இந்த நூலுக்காகவும், கிளர்ச்சி செய்கின்ற நூல் என்ற காரணத்திற்காகவும் அவருக்கு ரூபாய் 700 அபராதமும் (தண்டம்), சிறைத்தண்டனையும் அளிக்கப்பட்டது.


காதல் ஜோதி, சந்திர மோகன் (சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்), கம்பரசம், தீ பரவட்டும்! பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். பெரும்பாலான நூல்கள் இன்றும் அச்சில் கிடைக்கின்றன[


மறைவு
அண்ணாதுரை முதலமைச்சரான இரண்டு வருடத்திற்குள் புற்று நோய் தாக்குதலுக்குள்ளாகி, மருத்துவ பராமரிப்பிலிருக்கும் பொழுது 3 பெப்ரவரி, 1969 அன்று மரணமடைந்தார்.


அவர் புகையிலையை உட்கொள்ளும் பழக்கமுடையவராததால் (புகையிலைப் பொடி நுகரும் பழக்கம்)  இந்நோய் தீவிரமடைந்து மரணமடைந்தார்.


அவரின் இறுதி மரியாதையில் பெருந்திரளான மக்கள் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்வு கின்னஸ் உலக புத்தகத்தில். இடம் பெற்றுள்ளது. இறுதி மரியாதையில் சுமார் 1 கோடியே 50 இலட்சம் பேர்[47] கலந்துக் கொண்டு இறுதி மரியாதைச் செலுத்தினர்.


இவரின் உடல் சென்னை மெரீனா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. இவரின் நினைவை போற்றும் வகையில் இவ்விடம் அண்ணா சதுக்கம் [என்ற பெயரில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.


மேலும் சென்னை மெரீனா கடற்கரையில் இவர் உடல் புதைக்கப்பட்ட இடத்தை பேரறிஞர் அண்ணா நினைவிடம் எனும் பெயரில் நினைவிடமாக ஆக்கியுள்ளது.


இங்கு அண்ணாவின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. நூலகமும் செயல்பட்டு வருகின்றது. இங்குள்ள பேரறிஞர் அண்ணா அருங் காட்சியகத்தில் இவரது வாழ்க்கை வரலாற்றுப் புகைப்படங்கள் இவர் பயன்படுத்திய பொருட்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.


எம். ஜி. ராமச்சந்திரன் திமுகவிலிருந்து பிரிந்து தனிகட்சி தொடங்கியபோது அதற்கு அண்ணா திமுக என்று பெயர் வைத்தார்.


சென்னையில் உள்ள திமுக தலைமைச்செயலக கட்டிடத்துக்கு “அண்ணா அறிவாலயம்” என்றும், தமிழ்நாட்டின் முதன்மையான தொழில்நுட்ப பலகலைக்கழகத்திற்கு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.


சென்னையின் முக்கிய சாலையான மவுண்ட் ரோடு அண்ணா சாலை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.


சென்னை, மதுரை போன்ற நகரங்களின் முக்கிய குடியிருப்பு பகுதிகள் அண்ணா நகர் என்று பெயரிடப்பட்டுள்ளன.


வேலூரில் உள்ள அரசு திரையரங்கம் அண்ணா கலையரங்கம் என பெயர் சூட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இங்கு 24-9-1968 முதல் சிறுவர்களுக்கான திரைப்படம் திரையிடப்பட்டு பின்பு 9-7-1971 முதல் "அண்ணா கலையரங்கம்" எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு முழு நீளத் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.


2009ம் ஆண்டு மத்திய அரசு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நாணயத்தை வெளியிட்டது.


2010ம் ஆண்டு அண்ணா நூற்றாண்டு பூர்த்தியடைவதை நினைவு கூறும் வண்ணம் தமிழ்நாடு அரசு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியது.



அண்ணாதுரையின் பக்கவாட்டில் ஈ. வெ. கி. சம்பத் மற்றும் மு. கருணாநிதி நிற்கின்றனர், மறைந்த திரைக்கலைஞர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலை திறப்பு விழாவில் ஜி.என்.செட்டி சாலை, தி.நகர், வலது சற்றுத்தொலைவில் நிற்பவர்கள் எம்.ஜி.ராமச்சந்திரன் மற்றும் இந்தி திரைக்கலைஞர் திலிப் குமார். இதுவே அண்ணா கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சி ஆகும்.


இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின்  பயணம் தொடரும்.


தொகுப்பு மோகனா செல்வராஜ்