பாராட்டுக்களை குவிக்கும் 13 வயது சிறுவன்

தமிழக மக்களின் பாராட்டுக்களை குவிக்கும் 13 வயது சிறுவன்... இவ்ளோ சின்ன வயசுல என்ன செய்தார் தெரியுமாராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே இருக்கும் ராமசாமிபட்டி என்னும் சிறிய கிராமத்தை சேர்ந்தவர்கள் பாண்டி-ஸ்ரீதேவி. இவர்களது மகன்தான் சிவசங்கர். ரெட்டியபட்டி என்னும் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில், சிவசங்கர் படித்து வருகிறார். ஆரம்பத்தில் இருந்தே அறிவியல் கண்டுபிடிப்புகள் மீது சிவசங்கருக்கு ஆர்வம் அதிகம்.


பள்ளியில் நடைபெற்ற அறிவியில் கண்காட்சியில், அவற்றை காட்சிப்படுத்தி அதற்காக மாவட்ட அளவிலான பரிசுகளையும் அவர் வென்றுள்ளார். இந்த வரிசையில் சூரிய சக்தியில் இயங்கும் கார் ஒன்றை தயாரிக்க சிவசங்கர் முடிவு செய்தார். ஊரடங்கில் பள்ளிக்கூடத்திற்கு செல்லாமல் வீட்டில் இருந்த போது, அவருக்கு இந்த யோசனை வந்தது.


சைக்கிளை சூரிய சக்தி அல்லது பேட்டரியில் ஓடும்படி வடிவமைக்கலாம் என்று சிவசங்கருக்கு அவர்கள் யோசனை தெரிவித்தனர். இதனால் உற்சாகமான சிவசங்கர் உடனடியாக வேலையை தொடங்கி விட்டார். முதலில் இதற்கு என்னென்ன பொருட்கள் எல்லாம் தேவை? என பட்டியலிட்டு கொண்டு, அவற்றை வாங்கி கொண்டார்.


பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் காற்று மாசுபாடு உள்ளிட்ட பிரச்னைகளால் இந்தியாவில் தற்போது மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் வேகமாக பிரபலமாகி வருகின்றன. இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் மாணவன் சிவசங்கர் பேட்டரியில் இயங்கும் சைக்கிளை தயாரித்துள்ளார். இது பாராட்டப்பட வேண்டிய தயாரிப்புதான்.


மாணவன் சிவசங்கர் போலவே இன்னும் பலர், இதுபோன்ற கண்டுபிடிப்புகளை தயாரித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது பெட்ரோல், டீசலில் இயங்கும் கார் மற்றும் டூவீலர் உள்ளிட்ட வாகனங்களை பேட்டரியில் இயங்கும் வகையில் அவர்கள் மாற்றியமைத்துள்ளனர்.