12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் 10/09/2020


மேஷம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பழைய வாகனத்தை மாற்றி புதியது வாங்குவீர்கள். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவது குறித்து ஆலோசிப்பீர்கள்.


ரிஷபம்: கனவுத் தொல்லை வரும். பழைய கசப்பான சம்பவங்களை நினைத்து அவ்வப்போது கோபப்படுவீர்கள். முன்கோபத்தால் சிலரின் நட்பை இழந்து விடாதீர்கள்.


மிதுனம்: எதிர்மறை எண்ணங்கள் வரும். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்து கொள்வீர்கள். குடும்பத்தில் சின்ன சின்ன சச்சரவுகள் வரக்கூடும். வாகனம் செலவு வைக்கும்.


கடகம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். செல்லும் இடமெல்லாம் மரியாதை கிடைக்கும். வெளியூர் பயணத்தால் சில காரியங்கள் நிறைவேறும்.


சிம்மம்: அழகு, இளமை கூடும். எதிர்மறை எண்ணங்கள் விலகும். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும். பிரச்சினைகளை தீர்க்கும் சாமர்த்தியம் உண்டாகும்..
கன்னி: ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மூத்த சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும். எதிர்பாராத தொகை ஒன்று கைக்கு வரும். பால்ய நண்பரை சந்தித்து மகிழ்வீ்ரகள்.


துலாம்: வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். பிள்ளைகளுடன் வாக்குவாதம் வரும். அவர்களின் நட்பு வட்டத்தை கண்காணியுங்கள். தாயாரின் உடல்நலனில் கவனம் செலுத்துங்கள்.


விருச்சிகம்: கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். உறவினர்கள் உங்களின் சகிப்புத் தன்மையை பாராட்டுவார்கள். பால்ய நண்பர்களின் சந்திப்பால் உற்சாகமடைவீர்கள்.


தனுசு: அக்கம்பக்கத்து வீட்டாருடன் இருந்துவந்த மோதல் போக்கு நீங்கும். சகோதரர்களிடையே கலந்து பேசி முக்கிய பிரச்சினைக்கு தீர்வு காண்பீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.
மகரம்: புதிய திட்டங்கள் தடங்கலின்றி நிறைவேறும். தைரியமாக, தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புண்ணிய தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள்.


கும்பம்: மனக்குழப்பங்கள், வீண் விவாதங்கள் நீங்கும். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீட்டில் சில மாற்றங்கள் செய்ய நினைப்பீர்கள். வாகனம் செலவு வைக்கும்.


மீனம்: ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். கல்யாண முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். கடனை பைசல் செய்வீர்கள். மனைவிவழி உறவினர் தக்க சமயத்தில் உதவுவார்.