12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் 07/09/2020



மேஷம்: தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டும். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்து செல்லுங்கள். அடுத்தவர்களை குறைகூறுவதை நிறுத்துங்கள்.குழந்தைகளால் உள்ளம் மகிழும். சகோதரர்கள் வகையில் உதவிகள் கிடைக்கும்.


ரிஷபம்: குடும்பத்தினரிடம் கோபத்தை காட்ட வேண்டாம். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திடவோ உத்தரவாதமோ தரவேண்டாம். இருப்பினும் தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள்.தள்ளிப்போன வேலைகள் முடியும் நாள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும்.


மிதுனம்: கணவன் - மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். செய்யும் செயலை திருந்தச் செய்து பாராட்டுப் பெறுவீர்கள்.


கடகம்: சிந்தனைத் திறன் பெருகும். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். பழைய பிரச்சினைகள் கட்டுக்குள் வரும். கல்யாணப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும்.புதிய விஷயங்கள் கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும். நின்றுபோன வேலைகளை கூடுதல் முயற்சியால் நிறைவேற்றுவீர்கள்.




சிம்மம்: தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். திடீர் பயணம் ஏற்படலாம்.இளகிய மனதுடன் இருப்பீர்கள். சக ஊழியர்களின் தவறுகள் எரிச்சல் தரலாம்


கன்னி: உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். அடுத்தவர்கள் மனம் காயப்படும்படி பேசாதீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம்.பிள்ளைகளின் மூலம் சங்கடம் நேரலாம். வாகனம் சற்றே தொந்தரவு தரும்.


துலாம்: நிர்வாகத் திறமை வெளிப்படும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார்.கலைஞர்கள் பொறுமையாக இருக்க வேண்டும். சிலருக்கு அதிவிரைவில் நன்மை கிடைக்கும்.


விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பிரபலங்களின் நட்பு கிட்டும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிரச்னைகளிலிருந்து விடுபடும் நாள். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும்.பணியிடத்தில் புது முயற்சிகள் செய்து பிறரது கவனத்தை ஈர்ப்பீர்கள்.




தனுசு: பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். நீண்டநாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகம் ஏற்படும்.சீரான நாள். நிதிநிலையில் மாற்றமில்லை. பணிநிமித்தமாக திடீர் செயல்கள் செய்வீர்கள்.ஓய்வை விரும்ப மாட்டீர்கள். வாகனம் ஓட்டுவதில் கவனம் வேண்டும்.


மகரம்: குடும்பத்தின் அவசிய தேவைகளை பூர்த்திசெய்து கொள்வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.மனப்பக்குவம் குறையும் நாள். பணத்தின் அருமையை உணர்வீர்கள்.


கும்பம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வாகன வசதி பெருகும். சொத்துப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும்.பணியாளர்கள் தலைமை அதிகாரிக்கு கீழ்ப்படுவீர்கள். நிதி விவகாரங்கள் திருப்தியாக இருக்கும்


மீனம்: புதியவர்கள் அறிமுகமாவார்கள். பழைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். விலகியிருந்த சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள்.பணியாளர்களுக்கு நிம்மதி கிடைக்கும். கலைத்துறையினர் மகிழ்ச்சி அடைவர். கூடுதல் முயற்சியின் மூலம் சிறிதளவு வெற்றி கிடைக்கும்.









மோகனா  செல்வராஜ்