உருளைக்கிழங்கு புலாவ்

(பொடேட்டோ) உருளைக்கிழங்கு  புலாவ்தேவையான பொருட்கள்:


உருளைக்கிழங்கு -– 200 கிராம்
அரிசி –- 1 ஆழாக்கு
வெங்காயம் -– 100 கிராம்
பூண்டு –- 4 பல்
புதினா –- ¼ கட்டு
எண்ணெய் -– 1 குழிக்கரண்டி
பட்டை, இலவங்கம், ஏலக்காய் –- தலா 1
பச்சை மிளகாய் – 3
உப்பு -– தேவையான அளவு.


செய்முறை:


உருளைக் கிழங்கை உப்பு சேர்த்து முக்கால் பதத்தில் வேக வைத்து தோலை உரிக்கவும்.  நடுத்தர அளவில் வெட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.


கடாயில் எண்ணெய் ஊற்றி, அதில் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்ஹ்த்து தாளித்து, அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து முக்கால் பாகமாக வதக்கவும்.


இதில் பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி, அரிசியைப் போட்டு வதக்கவும்.  


இதில் 2 ஆழாக்கு தண்ணீர், உப்பு போட்டு குக்கரில் வேகவிடவும்.
5 விசில் வந்ததும் இறக்கவும்.  


பொரித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு, பொடியாக நறுக்கிய புதினா சேர்த்து 2 நிமிடம் வேகவிட்டு இறக்கி கலந்து பரிமாறவும்.


உருளைக்கிழங்கு  புலாவ் ரெடி


இதற்கு தயிர் பச்சடி சாப்பிட சுவையாக இருக்கும்.  இதேபோல், உருளைக்கிழங்குக்கு பதிலாக காலிஃப்ளவர் பயன்படுத்தியும் தயாரிக்கலாம்.உங்கள் வீட்டில் இந்த முறையில் ஒருவாட்டி உருளைக்கிழங்கு  புலாவ் ட்ரை பண்ணி பாருங்க! திரும்பத் திரும்ப செஞ்சுக்கிட்டே இருப்பீங்க.

 


உங்களது வீட்டில் உருளைக்கிழங்கு  புலாவ்  செய்து அனைவரையும் அசத்திடுங்கள்


இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் சமையல்  பயணம் தொடரும்.


வணக்கம் அன்புடன் கார்த்திகா