சப்த விடங்க தலங்கள் - திருநள்ளாறு - நாகவிடங்கர் கோயில் பகுதி 1

சப்தவிடங்கத்தலங்கள் என்பவை தமிழ்நாட்டில் உள்ள நடனத்தை அடிப்படையாகக் கொண்ட வழிபாட்டுத் தலங்கள் ஆகும்.திருநள்ளாறு - நாகவிடங்கர்   கோயில்


திருநள்ளாறு கோயிலில் நாகவிடங்கர் ஆடும் நடனம்  உன்மத்த நடனம். பெருமான் பித்தனைப் போல் சுழன்றாடுவதால் இந்தப் பெயர்.


திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்,சுந்தரர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சோ‌ழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 52ஆவது சிவத்தலமாகும்.


இத்தலத்தில் சனீசுவரன் இறைவன் வணங்கி பேறு பெற்றார். அதனால் இத்தலத்தில் உள்ள சனீசுவரன் புகழ்பெற்று விளங்குகிறார். இத்தல சனீசுவரரை வணங்கினால் ஏழரை சனி உள்ளிட்ட பல சனிகளின் பிரட்சனை தீரும். நள தீர்த்தத்தில் நீராடி சனீசுவரை தரிசனம் செய்து, இறைவன் தர்ப்பாரண்யேஸ்வரர் வழிபட்டு பேறு பெறுகின்றனர். 


கோவில்- திருநள்ளாற்றீஸ்வரர் திருக்கோவில்


ஊர்-திருநள்ளாறு மூலவர்-தர்ப்பாரண்யேஸ்வரர்


அம்பாள்-பிராணேஸ்வரி


நடனம்-நாகவிடங்கர்/உன்மத்த நடனம்


மாவட்டம்-காரைக்கால்


நவக்கிரகமாகிய சனிபகவான் ஈஸ்வரன் பட்டம் பெற்ற தலம், இங்கு மட்டுமே நந்தி ஒதுங்கி இருக்கும்


இக்கோயிலில் உள்ள இறைவன் மூலவர் தர்ப்பாரண்யேசுவரர். இவர் சுயம்புமூர்த்தியாக உள்ளார்.


தர்ப்பையில் முளைத்தவர் என்பதால் தர்ப்பாரண்யேசுவரர் எனப்படுகிறார். தர்ப்பையில் முளைத்த தழுப்புடன் உள்ளார்.


இவரை திருமால், பிரம்மன், இந்திரன், திசைப்பாலர்கள், அகத்தியர், புலத்தியர், அர்ச்சுனன், நளன் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.


கோயிலின் நிர்வாகத்திற்காக அரசர்கள் பசுக்களை கோயில்களுக்கு தானம் தந்து, அவற்றை மேய்த்து வழிநடத்த இடையர் குலத்திலிருந்து ஒருவரை நியமனம் செய்தனர்.


அதன்படி இடையன் அப்பசுக்களை மேய்த்து பாலைப் பெற்று கோயிலுக்குத் தர வேண்டிய பங்கினை தர வேண்டும்.


இதனால் இடையனின் வாழ்வும், நிர்வாகமும் சீராய் நடைபெறும். இத்தலத்திலும் இடையர் ஒருவர் இப்பொறுப்பில் இருந்தார்.


கணக்கர் அப்பாலைப் பெற்று தன் வீட்டுக்குத் தந்து கோயிலுக்குப் பொய்க்கணக்கு எழுதி வந்தார்.


அதனால் இறைவன் கணக்கரை சூலம் எய்தி கொன்றார். அத்துடன் இடையருக்கு இறைவன் காட்சி தந்தார். இறைவனிடமிருந்து எரியப்பட்ட சூலம் கணக்கரைக் கொல்ல வந்த போது, நந்தியும், பலிபீடமும் விலகிக் கொண்டன. அதனால் இத்தலத்தில் நந்தியும், பலிபீடமும் சற்று ஒதுங்கிய நிலையில் உள்ளது,


கோயிலின் தென்புறமாக இடையனார் கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இடையன், அவன் மனைவியுடன் உள்ளார். இவர்களுடன் கணக்கன் சிலையும் அமைந்துள்ளது.


நாளை  திருநள்ளாறு - நாகவிடங்கர்   கோயில் பகுதி 2 தொடரும்.
இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.தென்னாடுடைய சிவனே போற்றி  எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றிஓம்  சிவாய நம  ஓம் சிவ சிவ ஓம்


அன்பே சிவம் - சிவமே அன்பு   திருச்சிற்றம்பலம்


ஆன்மீக வாழ்வுக்கு புராதன கோவில்கள் பற்றிய தகவல்கள் அவசியம்


நன்றி. 


பக்தியுடன்  மோகனா  செல்வராஜ்