1 கோடி பேர் மாநகர பஸ்சில் பயணம்


கடந்த 1ம் தேதி முதல் நேற்று வரையில் 1 கோடி பேர் மாநகர பேருந்து சேவையை பயன்படுத்தியுள்ளதாக மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் கணேசன்  தெரிவித்துள்ளார். 


கடந்த 1ம் தேதி அன்று பொதுப் போக்குவரத்து தொடங்கப்பட்ட அன்றைய தினம்  ஏறத்தாழ 6 லட்சம் பயணிகள் பயணம் செய்தனர்.


நாளொன்றுக்கு 2,400க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஏறத்தாழ 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கின்றனர்.


1ம் தேதி முதல் இன்று (நேற்று) வரை 1 கோடியே  1 லட்சத்து 23 ஆயிரம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.  இதன் வாயிலாக 10 கோடி  வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.