கிசான் சம்மன் திட்ட முறைகேடு


வேலூர் மாவட்டத்தில் பிரதமரின் கிசான் சம்மன் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட புகாரின்பேரில் தனியார் கணினி மைய உரிமையாளரை  சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.


வேலூர் மாவட்டத்தில் பிரதமரின் கிசான் சம்மன் திட்டத்தில் தகுதியில்லாதவர்கள் இணைக்கப்பட்டு நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக  சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


வேலூர் மாவட்டத்தில் மட்டும் உள்ளூரைச் சேர்ந்த 3,200-க்கும் மேற்பட்டோரும், வெளி மாநிலங்களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்டோர் மூலம் ரூ.1.23 கோடி பணம் முறைகேடு செய்திருப்பது தெரியவந்துள்ளது.


வேலூர் மாவட்டத்தில் இதுவரை ரூ.70 லட்சம் அளவுக்கு பணத்தைத் திரும்பப் பெற்றுள்ளதாக வேளாண் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.