இன்றைய நாள் (03.09.2020)


உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் :


மேஷம் : இன்று பயணங்கள் ஏற்படும் நாள். குடும்பத்தில் விட்டு கொடுத்து போவது நல்லது. வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம்.ஒரு செயலை செய்வதற்கு முன்னர் திட்டமிட்டு செயல்படுங்கள்.அதிகம் உழைக்க வேண்டிய நாள்.


ரிஷபம் : இன்று வாய்ப்புகளை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். குடும்பத்தினரிடம் மனம் விட்டு பேசுவீர்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்எதிர்பாராத பலன்கள் கிடைக்கும். அது உங்களுக்கு ஆச்சரியத்தை தரும்.


மிதுனம் : இன்று நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.உங்கள் தகவல் தொடர்பு மூலம் நீங்கள் சாதிப்பீர்கள்.


கடகம் : ஆன்மீக பயணங்களுக்கு ஏற்ற நாள். பிறருக்கு உதவி செய்வதற்கு இன்றைய நாளை பயன்படுத்தி கொள்ளுங்கள்.  குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள்அது உங்களுக்கு நல்லதை தரும்.


சிம்மம் : சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியா வசிய செலவுகள் அதிகரிக்கும். சிறு சிறு அவமானங்கள் வரக்கூடும்.ஆன்மீகத்தில் ஈடுபடுவது நல்ல பலனை தரும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.


கன்னி : இன்று உங்களுக்கு வெற்றி கிடைக்கும் நாள்.சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும் தாயார் ஆதரித்து பேசுவா. புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பானதாக அமையும்.


துலாம் : உங்களுக்கு பணிகள் அதிகமாக இருக்கும். சமயோஜிதமாக பேசி சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிரிக்கும் சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள்.உங்கள் நேரத்தையும், ஆற்றலையும் சரியாக திட்டமிட்டு பயன்படுத்த வேண்டும்.


விருச்சிகம் : இன்று உங்களுக்கு சாதகமான பலன்கள் அமையும். நீங்கள் முயற்சி அதிகமாக எடுக்க வேண்டும்.  குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள்.சில சுப காரியங்கள் தள்ளிப்போகும் வாய்ப்புள்ளது.


தனுசு : நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மன ஸ்தாபம் வந்து நீங்கும். மகளுக்கு நல்ல வரன்அமையும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவது நல்ல பலனை தரும். ஆன்மீகத்தில் ஈடுபடுங்கள் அது உங்களுக்கு பயனளிக்கும். மன ஆறுதலும் மகிழ்ச்சியும் கிடைக்கும் நாள்.


மகரம் : நீங்கள் எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும். பயணம் மேற்கொள்வீர்கள்.குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள்.வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும் திடீர் யோகம் கிட்டும் நாள்.


கும்பம் : உங்கள் தகவல் தொடர்பு மூலம் சிறந்த பலன்களை கிடைக்கும். உங்கள் திறமைகளை மேம்படுத்த வேண்டும். அதற்காக இன்றைய நாளை பயன்படுத்தி கொள்ளுங்கள்.கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும் வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.


மீனம் : ராசிக்குள் சந்திரன் இருப் பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வு மனப்பான்மை வந்து செல்லும். பணம், நகையை கவனமாக கையாளுங்கள்.உங்களுக்கு சாதகமான பலன்கள் அமைய நீங்கள் சில விஷயங்களை விட்டுக்கொடுக்க வேண்டும். சிறிய எளிதான பணிகள் கூட உங்களுக்கு கடினமாக இருப்பது போல் உணர்வீர்கள்.


மோகனா  செல்வராஜ்