இன்றைய நாள் (02.09.2020)

இன்றைய ராசி பலன்கள் :மேஷம் : குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். இன்றைய நாள் சிறப்பானதாக அமையும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். புதிய நண்பர்களை பெறுவீர்கள்.பங்கு வர்த்தகம் லாபம் தரும். 


ரிஷபம் : இன்று உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். உங்கள் வாழ்வில் மாற்றங்கள் உண்டாகும். உங்களின் பலத்தை நீங்கள் உணர்வீர்கள். அது உங்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்.குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் நட்பு வட்டம் விரியும்.


மிதுனம் : இன்று உங்களுக்கு குழப்பம் தோன்றும் நாள். இருந்தாலும் அதனை சமாளித்து இன்றைய நாளை சிறப்பானதாக மாற்றுவீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபடுவது வெற்றியை தேடித்தரும். எதிர்பாராத பணவரவு உண்டு


கடகம் : இன்றைய நாள் மந்தமாக இருக்கும். உங்கள் தன்னம்பிக்கை இழந்து காணப்படுவீர்கள். நீங்களே உங்களை உற்சாகப் படுத்திக்கொள்ள வேண்டும். முடிவுகள் எடுக்க வேண்டாம்.சிறுசிறு அவமானம், வீண் விரயம் ஏற்படக் கூடும்.


சிம்மம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். மனோபலம் அதிகரிக்கும். கடனாக கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.உங்கள் பணிகளை எளிதாக செய்து முடிப்பீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.


கன்னி : ஏற்ற இறக்கங்கள் உள்ள நாள். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் கவுரவிக்கப்படுவீர்கள்.இன்று நீங்கள் விரைவாக முடிவெடுப்பீர்கள். மன உறுதியுடன் செயல்படுவீர்கள். எதையும் சாதிக்கும் ஆற்றல் உங்களிடம் காணப்படும்.


துலாம் : இன்று உங்களுக்குச் சாதகமான நாள். திட்டமிட்ட செயல்களை செய்ய வேண்டும். முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.  சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.கவுரவப் பதவிகள் தேடி வரும். 


விருச்சிகம் : இன்றைய நாள் அனுகூலமாக அமையாது. உங்கள் அணுகுமுறையில் மன உறுதி தேவை. ஓரளவு பணவரவு .உண்டு. குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.


தனுசு : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். விலை உயர்ந்த சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். செயல்களை எளிதாக செய்து முடிப்பீர்கள். உங்கள் பலத்தை நீங்களே உணர்ந்து கொள்வீர்கள்.


மகரம் :  இன்றைய நாள்  உங்களுக்கு சாதகமாக அமையும். உங்கள் திறமை மூலம் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். கைமாற்றாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள்


கும்பம் : இன்று முயற்சிகள் செய்து பலன் பெறுவீர்கள். அது உங்களுக்கு மகிழ்ச்சியை தரும். தேவையற்ற எண்ணங்களை நினைக்காதீர்கள். அது உங்கள் வளர்ச்சியை பாதிக்கும். விருந்தினர்களின் வருகையால் செலவுகள் அதிகரிக்கும்.


மீனம் : இன்றைய நாள் சற்று மந்தமாக இருக்கும். விலை உயர்ந்த ஆபரணங்களை யாருக்கும் இரவல் தர வேண்டாம். சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நாள். தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். நீங்கள் உங்களை உற்சாகப்படுத்திக்கொள்ள வேண்டும்.


மோகனா  செல்வராஜ்