சைக்கிள் போலீஸ்

 



விழுப்புரம் மாவட்டம் கூட்டேரிப்பட்டு பகுதியை சேர்ந்த இவர் மோகன்.


32 வயதுடைய இவர் விழுப்புரத்தில் உள்ள கிளியனூர் காவல் நிலையத்தில் முதல்நிலை போலீஸாக கடந்த 12 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.


இவர் தனது  வீட்டில்  இருந்து 20கி.மீ  தொலைவில் இருக்கும் காவல் நிலையத்திற்கு தினமும் சைக்கிளில் பயணம் செய்து தான் செல்வாராம்.


ஆம் மோகன் கடந்த 2 ஆண்டுகளாக தினமும் சைக்கிளில் 40கி.மீ பயணம் செய்து வருவதாக கூறப்படுகிறது.


தற்போது தினமும் காவல்நிலையத்திற்கு 40கி.மீ தூரம் வரை சைக்கிளில் சென்று வருகிறார். இதனால் தனது உடல் நிலை சீராக இருப்பதாகவும், மனஅழுத்தம் குறைவதாகவும் மோகன் கூறியுள்ளார்.


மேலும் தினமும் சைக்கிளில் செல்லும் மோகனை அப்பகுதி மக்கள் சைக்கிள் போலீஸ் என்று அன்புடன் அழைப்பதாக கூறப்படுகிறது.