பெயர் மாற்றத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்


கடந்த ஜூலை 29-ம் தேதி புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து "இஸ்ரோ" முன்னாள் தலைவர் டாக்டர் கே.கஸ்தூரி ரங்கன் தலைமையிலான நிபுணர் குழு தாக்கல் செய்த அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.


அதில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் பெயர் கல்வி அமைச்சகம் என மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அமைச்சரவையின் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த பெயர் மாற்றத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.


இதனால், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக இணையதளத்தில் கல்வி அமைச்சகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும்,மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் எனவும் கல்வித்துறை இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே எனவும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.