எஸ்.பி.பி உடல்நிலை குறித்து திமுக எம்.பி கனிமொழி ட்வீட்


எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை குறித்து திமுக எம் பி கனிமொழி தனது ட்வீட்டர் பக்கத்தில்  தெரிவித்துள்ளார்.


தமிழ் திரைப்பட பாடகர் எஸ்.பி. கடந்த வாரம் அவர் கொரோனா பரிசோதனையை  மேற்கொண்டார்.


அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி சென்னை சூளைமேடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று  உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் ஐசியுவிற்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சையில் பெற்று  வருகிறார்  என்று மருத்துவமனை ஒரு அறிக்கையை வெளியிட்டது.


இந்நிலையில் கொரோனா பாதித்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை அறிக்கை இன்று வெளியிட்டுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையில் அவர் விரைவில் குணமடைந்து மீண்டு வர திரையுலகினர் மட்டுமின்றி பலரும் தங்களது பிரார்த்தனைகளை பதிவிட்டு வருகின்றனர்.


இலட்சக்கணக்கான பாடல்களின் வழியாக நம் வாழ்க்கையின் முக்கிய அங்கமாகவே மாறிவிட்ட எஸ்பிபி இன்று உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்பது மிகுந்த வருத்தமளிக்கிறது என்றார்திமுக எம் பி கனிமொழி


மேலும் அதில், எந்த குரலை கேட்காது ஒருநாளைக்கூட தாண்டிப்போவது சாத்தியமில்லையோ, எந்த குரல் மக்களின் மகிழ்ச்சியையும் வலிகளையும் அன்றாடம் பகிர்ந்துகொண்டதோ, எந்த குரல் தன் பாடலின் வழி ஒரு நிகழ்கலையையே நடத்திடுமோ, அந்தக் குரலுக்கு சொந்தக்காரர் உடல்நலம் பெற்று மறுபடியும் அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுக்காக பாடவேண்டும் என்றுதிமுக எம் பி கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.