இஸ்ரோ தனியார்மயமாக்கபடாது- சிவன்


இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவானது தனியார்மயமாக உள்ளதாக ஒரு கருத்து நிலவி வந்தது.


அப்படி தனியார்மயமாக்கப்பட்டால், அரசின் பொருளாதார சுமை குறைக்கப்படும் என ஒரு தரப்பு வாதமும், விண்வெளி ஆராய்ச்சி மக்களுக்கானதாக இருக்க வேண்டுமே தவிர தனியார்மயமானால் அந்தந்த நிறுவனங்கள் நலனுக்கான ஆராய்ச்சியாக மாறிவிடும் என பலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.


இது குறித்து இன்று ஒரு கருத்தரங்கில் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், 'இந்திய விண்வெளி துறையில் மத்திய அரசின் சீர்திருத்தங்கள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.


மேலும், இஸ்ரோ தனியார்மயமாக்கல் குறித்து வெளியான தகவல்கள் தவறானவை. இஸ்ரோ என்றும் தனியார்மயமாக்கபடாது.' எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.