உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு


திமுக ஆட்சியில் பட்டியலினத்தவருக்கான   18 சதவீத இட ஒதுக்கீட்டில் இருந்து அருந்ததியருக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என சட்டம் நிறைவேற்றப்பட்டது.


இட உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது .இந்த வழக்கு விசாரணையானது நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையில்  5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.


அதில் உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று தீர்ப்பு அளித்துள்ளது.மேலும் இருப்பினும் உள்ஒதுக்கீடு முறை செல்லாது என கடந்த 2005-ஆம் ஆண்டு 7 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கியிருந்ததால் இந்த வழக்கு 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம் செய்வதாக நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.