மூத்த தலைவர் நல்லகண்ணு குணமடைந்தார்


கடந்த வெள்ளிக்கிழமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு சாதாரண காய்ச்சல் அறிகுறிகள் ஏற்பட்டதால் சென்னையில் உள்ள ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.


சாதாரணக் காய்ச்சல் தான் என்றும், அச்சம் கொள்ளத் தேவையில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் தெரிவித்தார்.


இதையடுத்து,  நல்லகண்ணுவிற்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா இல்லையென முடிவு வெளியானது.


இந்நிலையில், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு குணமடைந்து வீடு திரும்பினார்.