மத்திய ஆயுஸ் அமைச்சக செயலருக்கு தலைவர்கள் கண்டனம்


 


யோகா மருத்துவர்களுக்கான யோகா பயிற்சி வகுப்பு ஆன்லைன் மூலம் நடைபெற்றது.இந்த பயிற்சியில் இந்தியா முழுவதும் 350-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள்  பங்கேற்றனர்.தமிழகத்தை சேர்ந்த 37  பேர் இதில் பங்கேற்றனர்.


அப்பொழுது  மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷ் கொடேஜா  இந்தியில் பேசினார்.இந்த சமயத்தில் தமிழகத்தை சேர்ந்த மருத்துவர்கள் குறுக்கிட்டு  ஆங்கிலத்தில் பேசும்படி தெரிவித்தனர்.ஆனால் ராஜேஷ் கொடேஜா,எனக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசத் தெரியாது என்று கூறி ,இந்தி தெரியாதவர்கள் பயிற்சியில் இருந்து விலகிக் கொள்ளலாம் என்றும் கூறினார். இவர் இவ்வாறு கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.


யோகா, இயற்கை மருத்துவர்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட ஆயுஷ்துறை செயலர் மீது நடவடிக்கை தேவை - மு.க.ஸ்டாலின்


__________________


மத்திய அரசு, உடனடியாக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருக்க மத்திய அரசிடம் தமிழக முதல்வர் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். "தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா" என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


__________________


அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் இது குறித்து கூறுகையில்,இந்தி தெரியவில்லை என்றால் வெளியேறுங்கள் என்று மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷ் கொடேஜா  கூறியது கண்டிக்கத்தக்கது


_____________________


ஆயுஷ் பயிற்சி முகாம் இந்தியை திணித்து, தமிழக மருத்துவர்களை அவமானப்படுத்தி, மிரட்டிய மத்திய  ஆயுஷ் அமைச்சக செயலாளர் கொடச்சாவுக்கு  தமிழக அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுத வேண்டும்.இவ்வாறு ராமதாஸ்  கேள்வி எழுப்பியுள்ளார். தெரிவித்துள்ளார்.


__________________


மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் ஆன்லைன் பயிற்சி வகுப்பில்,'இந்தி தெரியாதவர்கள் வெளியேறுங்கள்' என தமிழக மருத்துவர்களைப் பார்த்து ஆயுஷ் செயலாளர் ராஜேஷ் கோட்சே கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது- டிடிவி தினகரன்