நிரவ் மோடி மனைவிக்கு ரெட் கார்னர் நோட்டீஸ்


பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் நிரவ் மோடி மற்றும் அவரின் உறவினரான மெகுல் சோக்‌ஷியும் ரூ.13,000 கோடிக்கு மேல் மோசடி செய்துவிட்டு இந்தியாவை விட்டு வெளியேறினர்.


தப்பி ஓடிய  நிரவ் மோடியை கடந்த மார்ச் மாதம் லண்டனில் வைத்து கைது செய்து லண்டன் வேண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைத்தனர்.


அவர் தனக்கு ஜாமீன் கேட்டு மூன்று முறை தாக்கல் செய்த  மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


இந்நிலையில்,  நிரவ் மோடி, மனைவி அமிரா மோடிக்கு கைது செய்ய அமலாக்கத்துறை, இண்டர்போலைக் கோரியிருந்தது. இதனால், இண்டர்போல் அமிரா மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸை வெளியிட்டது.  அமெரிக்காவில் இருந்த  நிரவ் மோடியின் சொத்துகளை ஏலம் விட்டு ரூ.24 கோடியை  மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது