ரேஷன் பொருட்கள் வழங்குவதற்கான டோக்கன்கள் விநியோகம்


கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.


இதனால், தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் அனைத்து அரிசி குடும்ப  அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 1000  உதவித் தொகையுடன் விலையில்லா அரிசி, சர்க்கரை பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் வழங்கப்பட்டது.


இதைத்தொடர்ந்து, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் தொடர்ந்து  ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும்  ரேஷன் பொருட்கள் ஜூலை 2020 இலவசமாக வழங்கப்பட்டது.


இந்நிலையில் செப்டம்பர் மாத ரேஷன் பொருட்களை வழங்க ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 1-ஆம் தேதி வரை டோக்கன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .


செப்டம்பர் 3-ஆம் தேதி முதல் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.