தென்காசி பகுதியில் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு


தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனா, அடவிநயினார்கோவில், ராமநதி, கருப்பாநதி நீர்த்தேக்க கால்வாய்களில் தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு.


தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனா, அடவிநயினார்கோவில், ராமநதி, கருப்பாநதி நீர்த்தேக்க கால்வாய்களில் தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.


கார் சாகுபடிக்கு 21 ஆம் தேதி முதல் நவம்பர் 25 வரை, 97 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்.


இதனால் தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர் அம்பாசமுத்திரம் போன்ற பகுதியில் 8,225.46 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவித்துள்ளார்.