பிரபல பாலிவுட் இயக்குநர். உயிரிழந்துள்ளார்.


பிரபல பாலிவுட் இயக்குநரான நிஷிகாந்த் காமத் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததை அடுத்து தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


கடந்த சில மாதங்களாக பல பிரபலங்களை கொரோனாவாலும், சிலர் வேறு நோய்களாலும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். பாலிவுட் திரையுலகில் இர்பான் கான், ரிஷி கபூர், சுஷாந்த் சிங் உள்ளிட்ட பலர் மரணமடைந்தனர்.


அந்த வகையில் தமிழில் மாதவனின் எவனோ ஒருவன் படத்தை இயக்கியவரும்,பாலிவுட்டின் பிரபல இயக்குநருமானவர் நிஷிகாந்த் காமத் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் .


சமீபத்தில் அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்பட்டு வந்தது. தற்போது இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


அவரது குடும்பத்தினருக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இவர் மலையாளத்தில் மெகா ஹிட் படமான திரிஷ்யம் படத்தின் இந்தி ரீமேக்கை இயக்கியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.