எம்பி வசந்தகுமாருக்கு வென்டிலேட்டர் மூலம் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறதுகே.எஸ். அழகிரி


கன்னியாகுமரி தொகுதி எம்பி வசந்தகுமாருக்கு வென்டிலேட்டர் மூலம் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்தவகையில், சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கன்னியாகுமரி தொகுதி எம்பி வசந்தகுமாருக்கும், அவரின் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இந்தநிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி எம்பி வசந்தகுமாருக்கு தற்போது வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பபட்டு வருகிறதாகவும், அவர் விரைவில் மீண்டு வர வேண்டும் என விரும்புகிறதாகவும் தெரிவித்தார்.