வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் வெளி நாடுகளிலிருந்து திரும்பிய இந்தியர்கள்


கொரோனா பாதிப்பு காரணமாக வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை தங்களது சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாத சூழ்நிலை நிலவியது.


அப்போது அரசாங்கம் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீண்டு கொண்டு வருவதற்காக 'வந்தே பாரத்' என்ற திட்டத்தை தொடங்கியது.


தற்போது 5வது கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் இதுவரை 12 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளிநாடுகளில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ளதாக வெளியுறவு அமைச்சகம்  தெரிவித்துள்ளது.


இந்த 5வது கட்டத்தில் 22வெவ்வேறு நாடுகளில் இருந்து புறப்பட்ட சுமார் 900 சர்வதேச விமானங்கள் இந்தியாவில் உள்ள 23 விமான நிலையங்களை அடைந்துள்ளதாகவும், இந்த 5வது கட்ட பணிகள் ஆகஸ்ட் 31-ஆம் தேதி நிறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன் ஆறாம் கட்டம் செப்டம்பர் 1-ஆம் தேதி தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.