மருத்துவர் திருவேங்கடம் வீரராகவன் காலமானார் தலைவர்கள் இரங்கல்

5 ரூபாய் மட்டுமே வாங்கி மருத்துவம் செய்து வந்த திருவேங்கடம் வீரராகவன் மாரடைப்பால் காலமாகியுள்ளார்.



கடந்த 1973ல் ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவ படிப்பை முடித்த திருவேங்கடம் வீரராகவன் முதலில் 2 ரூபாய்க்கு தனது மருத்துவ சேவையை தொடங்கினார்.


அதனையடுத்து 5 ரூபாயாக உயர்த்திய இவரது இந்த மருத்துவ சேவைக்கு மருத்துவர்கள் பலர் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அவர் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக 5 ரூபாய் வாங்கி கொண்டு சிகிச்சை அளித்து வருகிறார்.


எருக்கஞ்சேரியில் காலை 9 மணி முதல் 12 மணி வரையும், வியாசர்பாடியில் மாலை 7.30லிருந்து 9 மணி வரையும் மருத்துவம் பார்த்து வந்தார்.


5 ரூபாய் மட்டுமே வாங்கி சிகிச்சை அளிப்பதை குறித்து அவர் கூறிய போது, நான் கட்டணம் இல்லாமல் தான் மருத்துவம் படித்ததாகவும், எனவே தனது சேவையும் கட்டணம் இல்லாமல் இருக்க வேண்டும் என்று நினைத்தேன் என்றும் கூறினார்.


பிறந்தது வளர்ந்து எல்லாம் வியாசர்பாடியில் தான். கடந்த 1973ம் ஆண்டில் இருந்து இங்குதான் இருந்தேன், ஆனால், 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் இங்கிருந்து வெளியேறினேன். இந்தவியாசர்பாடியில் வாழும் குடிசை வாழ் மக்களுக்காக ஒரு மருத்துவமனை கட்ட வேண்டும், என் உயிர் இருக்கும் வரை அவர்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்பதே எனது ஆசை’’ என்றார்.


இவர்தாங்க ‘நிஜ மெர்சல் டாக்டர்’...வடசென்னையில் 2 ரூபாய்க்கு சிகிச்சை அளித்து நெகிழ வைக்கிறார்


இவரது இந்த சேவையை பாராட்டி கடந்த 2017ல் சிறந்த மனதருக்கான விருதை அரசு வழங்கியது 70 வயதான இவர் நேற்றைய தினம் மாரடைப்பால் காலமாகியுள்ளார். இவருக்கு ஓய்வு பெற்ற ரயில்வே உழியருமான மனைவியும்,மருத்துவத்துறையில் பணிபுரியும் தீபக் மற்றும் ப்ரீத்தி என்ற இரண்டு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


திருவேங்கடத்தின் மனைவி சரஸ்வதி ரெயில்வேயில் பணிபுரிந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்று வீட்டில் இருக்கிறார். இவரின் மகன் டி. தீபக், மகள் டி ப்ரீத்தி ஆகியோர் மொரீசியஸ் நாட்டில் டாக்டர் படிப்பு படித்து வருகின்றனர்.


தன்னுடைய பிள்ளைகள் படிப்பு முடித்து நாடு திரும்பியபின், தனது கனவான சொந்த மருத்துவமனையைதான்பிறந்த வளர்ந்த வியாசர்பாடியில் கட்டிவிடலாம் என்ற நினைப்புடன் திருவேங்கடம் உலாவருகிறார். ...

பல தலைவர்கள் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றன. 5 ரூபாய் மட்டுமே பெற்றுக்கொண்டு இறுதி மூச்சு உள்ள வரை சிகிச்சை அளித்த சிறப்புக்குரியவர் திருவேங்கடம்  என புகழாரம் சூட்டினார்.அந்த வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவர் திருவேங்கடம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.


வடசென்னையில் வெறும் 2 ரூபாய்க்கு மருத்துவ சிகிச்சை அளிக்கத் தொடங்கி தன் வாழ்நாளில் அதிகபட்சமாக ரூ.5 மட்டுமே சிகிச்சை கட்டணமாகப் பெற்றவர் ‘மக்கள் டாக்டர்’ திருவேங்கடம். எளிய மக்களின் உயிர் காக்கும் அன்பிற்குரிய மருத்துவராக விளங்கிய திருவேங்கடம் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக பதிவிட்டுள்ளார்.