கொரோனா நோய் தொற்று காலத்தில் பொது மக்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.
இந்நிலையில், பொதுமக்கள் சிகிச்சைக்கு அதிக நிதிச்சுமைக்கு ஆளாகாத வண்ணம் தனியார் மருத்துவமனைகளில் அதிகபட்சமாக செலுத்தப்பட வேண்டிய கட்டணங்களை நிர்ணயித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
புகாரின் அடிப்படையில் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டபோது, நோயாளி ஒருவருக்கு 18 நாட்களுக்கான சிகிச்சைக்கு ரூ.12.5 லட்சம் கட்டணம் என கூறி முன்பணமாக ரூ 2.5 லட்சம் பணம் வாங்கிய மீத கட்டணத்தை செலுத்த அப்பாசாமி மருத்துவமனை கூறியது விசாரணையில் தெரியவந்தது.
இதனால், அப்பாசாமி மருத்துவமனைக்கு கொரோனா நோய்சிகிச்சைக்காக அளிக்கப்பட்ட அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கீழ்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்ணயக்கப்பட்ட கட்டணங்களை விட கூடுதலாக கட்டணம் வசூல் செய்ததால் அந்த மருத்துவமனை மீது சமீபத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.