ஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைய- ரஜினிகாந்த்


பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைந்து திரும்பி வர வேண்டும் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அதில் 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் உள்ள பல மொழிகளில் தனது இனிமையான குரலில் பாடி கோடிகணக்கான மக்களை மகிழ்வித்த மதிப்பிற்குரிய எஸ்பிபி அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அபாய கட்டத்தை தாண்டி விட்டார் என்று கேள்விப்பட்டதில் மிக்க மகிழ்ச்சி.


இன்னும் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள எஸ்பிபி அவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் விரைந்து குணமடைய வேண்டும் என்று இசையமைப்பாளர் தேவா கூறியுள்ளார்.


எஸ்.பி.பாலசுப்பிரமணியன் விரைந்து குணமடைய வேண்டும் என்று தேவாவும் அவரது மகன் ஸ்ரீகாந்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


 


 


 சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்த முதியவரிடம் ஏ.டி.எம். காலாவதியாகி விட்டதாக கூறி ரூ. 1 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. வங்கி மேலாளர் எனக்கூறி செல்போனில் தொடப்புக்கொண்ட நபர் ஏ.டி.எம். காலாவதியாகி விட்டதாக கூறியுள்ளார். அதனை உண்மை என நம்பி வங்கி விவரங்களை முதியவர் சதாசிவம் தெரிவித்துள்ளார். வங்கி விபரத்தை தெரிவித்தவுடன் கணக்கில் இருந்த ரூ. 1 லட்சம் பணம் திருடப்பட்டதாக புகார் அளித்துள்ளார்.