ஊட்டியில் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்


திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட திமுக தலைமை அலுவலகத்தில், மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் உருவச் சிலையை காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.


அதன்பின் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றிய அவர், முதல்வராக இருந்து தமிழகத்தை வளர்த்தவர் கருணாநிதி என்று புகழாரம் சூட்டினார். மேலும் நீலகிரி மாவட்ட மக்களுக்கு, கருணாநிதி செய்த நலத்திட்டங்களையும் பட்டியலிட்டு பேசியுள்ளார்.