பாஜக மூத்த தலைவர் இல.கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதி


பாஜக மூத்த தலைவரான இல.கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார்.


இதற்கு முன் தமிழகத்தில் அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், திமுக எம்எல்ஏக்கள் என்று பலர் வரிசையாக கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டனர்.


கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன், காங்கிரஸ் எம்பி வசந்த குமார் மரணம் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடப்படுகிறது.


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. மக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்


இப்படி அடுத்தடுத்து அரசியல் தலைவர்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.