அதிமுக முன்னாள் அமைச்சர்  திமுகவில் இணைந்தார் அதிர்ச்சியில் முதல்வர்

 


மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்  டாக்டர் விஜய் திமுகவில் இணைந்தார்.


திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 15.08.2020 சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜய் திமுகவில் இணைந்தார்.


அப்போது திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, எம்எல்ஏ, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பி, திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் சக்கரபாணி எம்எல்ஏ, மதுரை வடக்கு மாவட்டச் செயலாளர் பி.மூர்த்தி எம்எல்ஏ,வேலூர் மத்திய மாவட்டச் செயலாளர் கே.பி.நந்தகுமார் எம்எல்ஏ,  வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், வேலூர் மத்திய மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமதுசகி ஆகியோர் உடனிருந்தனர்.


திமுகவில் இணைந்த டாக்டர் விஜய் கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் வி.எஸ்.விஜய் அதிமுகவில் இருந்து விலகி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.