முன்னாள் கேப்டன் மஹிந்திர சிங் தோனி & சுரேஷ் ரெய்னா ஓய்வு


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹிந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகின.


இதனால், கிரிக்கெட் ரசிகர்கள் தோனியின் திறமையும், கிரிக்கெட் திறனையும் சிலாகித்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.


அந்த வகையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் தோனி பற்றி எழுதியுள்ளார்.


அதில், 'இந்திய கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன்களில் ஒருவர் தோனி. கடின உழைப்புக்கும், விடாமுயற்சிக்கும்  இளைஞர்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணம். கிரிக்கெட் பிரியர்கள் உங்களின் திறமையான விக்கெட் கீப்பிங் மற்றும் கேப்டன்ஷிப்பை எப்போதும் போற்றுவார்கள்.' என பதிவிட்டுள்ளார்.இந்திய அணி கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.


தோனி ஆகஸ்ட் 15 இரவு 7.29 மணிக்கு ஓய்வை அறிவித்தார். அந்த ஓய்வு அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்த நிலையில், ரெய்னா ஓய்வு அறிவிப்பு வெளியானது. இந்த அடுத்தடுத்த அறிவிப்புகளால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ரெய்னாவுக்கு 33 வயது மட்டுமே ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.