அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்& திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு கொரோனா


தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், எம்.எல்.ஏ.கள்,எம்.பி.களை தொடர்ந்து, அமைச்சர்களையும் கொரோனா வைரஸ் தாக்கி வருகிறது.


அந்தவகையில் இன்று, தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கொரோனா உறுதியானது.


இதனைதொடர்ந்து அவர், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இதனைதொடர்ந்து அவர், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி, அவரின் மனைவி மற்றும் மகனுக்கும் கொரோனா தொற்று உறுதியானது.இந்நிலையில், தற்போது அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு கொரோனா தொற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதனால் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.