கோவையை சார்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மகள் சுபஸ்ரீ( 19) இவர் கடந்த 2 ஆண்டுகளாக கோவையில் உள்ள நீட் தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வைத்துள்ளார்.
சுபஸ்ரீ கடந்த முறை பி.டி.எஸ். படிப்பில் சேர நீட் தேர்வு எழுதினார். அதில், அவர் தோல்வி அடைந்தார். பின்னர், மருத்துவ படிப்பில் சேர மீண்டும் நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட நீட் தேர்வு அடுத்த மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்குஉச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.
இதனால், இந்த முறை தேர்ச்சி பெறுவோமா? என்ற மன குழப்பத்தில் இருந்த சுபஸ்ரீ நேற்று மாலை அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சுபஸ்ரீயின் தாய் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் உடலைக் கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், மாணவி தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே அனிதா என்ற மாணவி நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாததால் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார்.
உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு தி.மு.க மாவட்ட பொறுப்பாளர்கள் சி.ஆர் ராமசந்திரன், நா.கார்த்தி எம்.எல்.ஏ ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பித்தக்கது