கேரள தலைமைசெயலகத்தில் தீ விபத்து


கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள அரசின் தலைமை செயலகத்தில் இன்று மாலை தீ விபத்து ஏற்பட்டது. இவை சிறிய தீ விபத்து என்பதால் அங்குள்ள தீயணைப்பு கருவிகளை கொண்டு தீ அணைக்கப்பட்டது. இருந்தாலும், சில ஆவணங்கள் ஏறிந்து போனதாக கூறப்படுகிறது.


அலுவலகத்தில் உள்ள ஏசி பழுதடைந்து அதில் ஏற்பட்ட மின்கசிவு காரணத்தால் அதிலிருந்து தீ பற்றிக்கொண்டது என தலைமை செயலர் விஷ்வா மேக்தா விளக்கமளித்தார்.


மேலும் இதுதொடர்பாக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான ரமேஷ்சென்னிதாலா நிகழ்விடத்திற்கு வந்து, தங்க கடத்தல் ஆவணங்களை அழிப்பதற்காக தீ வைக்கப்பட்டுள்ளது என கேரள அரசு மீது குற்றம் சாட்டி, மேலும், இந்த தீ விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்டது எனவும் கூறினார்.


கேரள அரசின் தலைமை செயலகத்தில் இன்று மாலை தீ விபத்து ஏற்பட்டது. இது எதிர்பாராமல் நடந்த விபத்து அல்ல, திட்டமிட்ட நடத்தப்பட்டது என காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டம் நடத்தினர்.