இந்தியா தன்னிறைவு பெறுவதே, ஒவ்வொரு இந்தியரின் தாரக மந்திரமாக இருக்க வேண்டும். நாடு முழுவதும் இன்று 74-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது.
தற்போது கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், பல கட்டுப்பாடுகளுடன், சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில், 7-வது முறையாக தேசிய கொடியை ஏற்றி மக்களுக்கு உரையாற்றினார்.
சுதந்திரப்போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவுகூறும் நாளே சுதந்திர தினம்.
தற்போது கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், பல கட்டுப்பாடுகளுடன், சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில், 7-வது முறையாக தேசிய கொடியை ஏற்றி மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அப்போது பேசிய அவர், சுதந்திரப்போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவுகூறும் நாளே சுதந்திர தினம் என்று கூறியுள்ளார்.
மேலும், கொரோனாவுக்கு எதிராக போராடும் முன்களப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் பேசுகையில், கொரோனா காலத்தில் இந்தியாவில் அந்நிய முதலீடுகள் அதிகரித்துள்ளன என்றும், உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் இந்தியா மீது நம்பிக்கை வைத்துள்ளன என்றும், நமது சீர்திருத்தங்களால் பல நாடுகள் நம் மீது நம்பிக்கையை அதிகரித்துள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் தயாரிப்புகளுக்கு குரல் கொடுப்போம் என்பது இனி நமது மந்திரம் என்றும், உலகப் பொருளாதாரத்தில் இந்திய பங்களிப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், இந்தியா விரைவில் தன்னிறைவு பெரும் என்றும், இந்தியா தன்னிறைவு பெற்றால் தான் பிற நாடுகளுக்கு உதவி செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
vocal for local
மேலும், இந்தியா தன்னிறைவு பெறுவதே, ஒவ்வொரு இந்தியரின் தாரக மந்திரமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.