ஆவணி மாதத்தின் சிறப்பம்சங்கள்

ஆடி போய் ஆவணி வந்தால் நன்மை கூடி வரும்.. அப்படியென்ன சிறப்பு ஆவணி மாதத்தில்.காலக்கணிப்பில் தமிழர் வழக்கப்படி, ஆண்டின் ஐந்தாவது மாதம் ஆவணி (About this soundஒலிப்பு (உதவி·தகவல்)) ஆகும்.


சூரியன் சிங்க இராசியுட் புகுந்து அங்கே வலம் வரும் காலமான 31 நாள், 02 நாடி, 10 விநாடிகளைக் கொண்டதே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 31 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும்.


சூரிய பகவான் சொந்த வீடான சிம்மத்தில் சஞ்சரிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:


நவகிரகங்களின் ராஜாவாக சூரிய பகவான் பார்க்கப்படுகிறார். இவர் ஒவ்வொரு ராசியில் சஞ்சரிக்கும் போது ஒவ்வொரு தமிழ் மாதமாக கருதப்படுவது வழக்கம். அந்த வகையில் சூரியனை அதிபதியாக கொண்ட சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் போது ஆவணி மாதம் என குறிப்பிடப்படுகிறது. 


ஆவணியில் சூரியன் தன் சொந்த வீட்டில் ஆட்சி பெற்று வலுவாக அமர்கிறார். சூரியனே ஆத்மகாரகன் என்றும், பிதுர்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். இதன் காரணமாக சூரியன் வலுப்பெறும்போது எந்த காரியத்தை செய்தாலும் சிறப்பான பலனை தரும்.


ஆவணி மாதத்தின் சிறப்பம்சங்கள் :


 தமிழ் மாதங்களில் ஒவ்வொன்றிற்கும் தனி முக்கியத்துவம் உண்டு. சித்திரை தொடங்கி பங்குனி வரை பல்வேறு விசேஷங்கள் வருவதுண்டு. அதில், ஒரு சில மாதங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.


'ஆடி போய் ஆவணி வந்தால் நன்மை கூடி வரும்" என்பதைப் போல் ஆவணி மாதம் மிகச் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. ஆடியில் சில நிகழ்ச்சிகள் செய்யமாட்டார்கள். ஆவணி தொடங்கியதும், உடனே அந்த நிகழ்ச்சியினை வைத்துவிடுவார்கள்.


ஆவணி மூலம் என்பது ஆவணி மாதத்து மூல நட்சத்திரத்திலே சிவபெருமானைப் போற்றி எடுக்கப்படும் விழாவாகும்.


ஆவணி மூல நாளிலே மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதப் பெருமான் ஆடிய திருவிளையாடல் மக்களை மிகவும் கவர்வதாகும்.செம்மனச் செல்விக்கான வரம்புப் பங்கினைத் தாம் அடைப்பதாக அவரிடம் பிட்டினைக் கூலியாகப் பெற்று, கூலிக்குரிய வேலையைச் செய்யாது நின்று சொக்கன் பிரம்படிபட்ட திருவிளையாடல் ஆவணி மூலத்திற்குரியது.


மதுரையிலே இவ்விழா விமரிசையாகக் கொண்டாடப்படும். பிட்டுத் திருவிழா என்றும் அங்கு இதனைக் கூறுவர். சுந்தரேசர் பொற்கூடையுடனும் பொன் மண்வெட்டியுடனும் இந்த விழா நாளில் வைகை ஆற்றிலிருந்து பக்தர் சூழ கோயிலுக்கு எழுந்தருளுவர்.


சிவபெருமான் மாணிக்கவாசகருக்காக நரிகளைப் பரிகளாக்கித் திருவிளையாடல் புரிந்ததும் இந்த ஆவணி மூல நட்சத்திரத்திலே ஆகும்.


மூல நட்சத்திரத்தின் அதி தேவதை நிருதி என்னும் அசுரன் என்றும் அதனால் அசுர சக்தியின் செல்வாக்கினை சொக்கனின் மேல் ஏற்படும் பக்தி உணர்ச்சியின் மூலம் ஒழிக்க வேண்டும் என்று சைவர்கள் கருதுவர். தெய்வ பக்தியை வற்புறுத்துவதாகத் திருவிளையாடல் அமைதல் குறிப்பிடத்தக்க


ஆவணி மாதத்தில் விநாயகர் அவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியன நிகழ்ந்ததாக சொல்வார்கள்.


ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை :


ஆவணி மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் ஞாயிறு என்றாலே சூரியன். அது மட்டுமின்றி, ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை தோறும் காலை 6.00 - 7.00 மணி வரை சூரிய ஓரையே இருக்கும்.


ஆவணியில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆன்மீக அறிவைப் புகட்டினால், அவர்கள் அதில் சிறந்து விளங்குவார்கள். தேகநலனுக்காக சூரிய நமஸ்காரப் பயிற்சி எடுப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்குவது மிகவும் விசேஷமாகும்.


விநாயகர் சதுர்த்தி :


விநாயகருக்கு உரிய விரதங்களுள் மிக விசேஷமானது விநாயகர் சதுர்த்தி. இந்த ஆண்டு ஆவணி மாதம் 06ஆம் தேதி (22.08.2020) சனிக்கிழமை அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது.


விநாயகரை போற்றி வரும் ஆவணி சதுர்த்தியான விநாயகர் சதுர்த்தியில் விரதமிருந்து வழிபட அனைத்து நன்மையும் கிடைக்கும்.


ஆவணி 7 ஞாயிறு கிழமை (23.08.2020): ரிஷி பஞ்சமி : சப்த ரிஷிகளை வணங்கலாம். விநாயகர் சதுர்த்திக்கு மறுநாள் வரும்.

 

பஞ்சமி திதியை ரிஷி பஞ்சமி என்று அழைக்கிறார்கள். அன்றைய தினம் சப்த ரிஷிகளை வணங்கி வழிபாடு செய்பவர்களின் இல்லங்களில் வளம் பெருகும் என்பது ஐதீகம்.

 


இந்த விரதத்தின் மூலம் வேண்டிய வரங்களைப் பெற முடியும். பெண்களின் சவுபாக்கியம் அதிகரிக்க வேண்டிச் செய்யப்படும் விரதம் இதுவாகும்.


 


ஆவணி 15 திங்கட்கிழமை : திருவோணம். வாமன ஜெயந்தி. மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்த நாள். மகாபலி சக்ரவர்த்தியிடம் மூன்றடி நிலம் கேட்டு மூவுலகையும் தன் பாதங்களால் அளந்து பாதாள லோகத்திற்கு அதிபதியாக மாற்றிய தினம் திருவோணப்பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. 


ஆவணி மாத வளர்பிறையின் சிறப்பு :


 விவசாயத்திலும் ஆவணி மாதம் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. ஆடிப் பட்டம் தேடி விதைக்கும் விவசாயிகள், ஆவணி மாதத்தில் சற்றே ஓய்வு எடுத்துக்கொள்வதுடன், ஒட்டுமொத்த வேளாண் மக்களும் தங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயங்களை, விழாக்களை நடத்தி மகிழ்வார்கள்.


ஆவணி மாதத்தில் கிரகப்பிரவேசம் செய்தால் அந்த வீட்டில் நீண்ட நாட்கள் தங்கலாம். திருமணம் செய்தால் வாழ்க்கை சிறப்பாக அமையும்.


 
தொகுப்பு மோகனா  செல்வராஜ்