தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு - தலைவர் வாழ்த்து


69-வது பிறந்தநாளையொட்டி பலரும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். தற்போது, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் செய்தியை அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


அதில், வானத்தை போல பரந்த மனசு இருப்பதால் அனைவரின் அன்பையும், மரியாதையும் பெற்று புலன் விசாரணை செய்தலும் எந்த குறையும் கண்டுபிடிக்க முடியாத அன்பின் சகாப்தமாக கேப்டனாக மரியாதையுடன் நெறஞ்ச மனசுதான் வலம் வந்து கொண்டிருக்கும் அண்ணன் விஜயகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.


 


தமிழக முதல்வர் பழனிசாமி, அவரது ட்விட்டர் பக்கத்தில் விஜயகாந்த் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


முதல்வர் பதிவில், திரைத்துறை, அரசியல் மற்றும் பொதுவாழ்வில் சிறப்பாக பணியாற்றி நன்முத்திரை பதித்து வரும் விஜயகாந்த் அவர்கள் நல்ல உடல்நலத்தோடும், நீண்ட ஆயுளோடும் நீடூழி வாழ்ந்து தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை வேண்டி, உளம்நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.