இன்றைய வரலாறு மாதவையா & ஜேம்ஸ் கேமரூன்

அ.மாதவையாதமிழ் முன்னோடி எழுத்தாளர், நாவல் ஆசிரியர், பத்திரிக்கையாளர் என பன்முகத்திறன் கொண்ட அ.மாதவையா 1872ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி திருநெல்வேலி அருகே பெருங்குளம் என்னும் கிராமத்தில் பிறந்தார். 


அ. மாதவையா (A. Madhaviah) (ஆகஸ்ட் 16, 1872 - அக்டோபர் 22, 1925) , தமிழின் ஒரு முன்னோடி எழுத்தாளர், நாவலாசிரியர், பத்திரிக்கையாசிரியர், எழுத்தின் மூலம் சமூக சீர்திருத்தம் கொண்டுவருவதில் நம்பிக்கை உடையவர். பத்மாவதி சரித்திரம் என்ற புகழ் பெற்ற நாவலை எழுதியவர். ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் புலமைப் பெற்றவர்.


தன் பள்ளிப்படிப்பை திருநெல்வேலி மாவட்டத்தில் 1887ஆம் ஆண்டில் முடித்தார். சென்னையில் உள்ள கிறித்துவ கல்லூரியில் இளங்கலை மேற்படிப்பு தொடர்ந்தார்.


இங்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்றார். தன்னுடைய கல்லூரி முதல்வரான வில்லியம் மில்லரின் கருத்துக்களினால் கவரப்பட்டார். தன்னுடைய இளங்கலை படிப்பை (B.A) 1892 இல் முதல் மாணவராக முடித்தார்


இந்திய கும்மி என்ற கவிதைப் போட்டி 1914ஆம் ஆண்டு நடந்தது. இதில் மாதவையாவுக்கு முதல் பரிசு கிடைத்தது. பஞ்சாமிர்தம் என்ற பத்திரிக்கையை 1925ஆம் ஆண்டு தொடங்கினார்.


நாவல், சிறுகதைத் தொகுப்பு, நாடகங்கள், கவிதைகள் என ஏராளமான கட்டுரைகளை தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.


மாதவையாவுக்கு அக்காலத்தில் இருந்த அவரது குடும்ப விழுமியங்களுக்கு ஏற்ப தன்னுடைய பதினைந்தாம் வயதிலேயே (1887) திருமணம் செய்யப்பட்டது. அவருக்கு, ஐந்து பெண் மற்றும் மூன்று ஆண் என்று எட்டு மகவுகள்.


அவருடைய பிள்ளைகளான மீனாக்ஷி தியாகராஜன்,கிருஷ்ணன் , முக்தா வெங்கடேஷ் என்ற முத்துலக்ஷ்மி ஆகியோர் பிரபலமானவர்கள். பெ. நா. அப்புசாமி அறிவியல் எழுத்தாளர்  இவருக்கு அண்ணன் மகன்.


சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினராக 1925ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டில் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் கூட்டத்தில் தமிழை இளங்கலைப் பட்டப்படிப்பில் கட்டாயப் பாடமாக சேர்க்க வேண்டும் என உரையாற்றினார். இவர் பேசி முடித்து அமர்ந்ததும் அந்த இடத்திலேயே உயிர் பிரிந்தது.


ஜேம்ஸ் கேமரூன் ஹாலிவுட் வரலாற்றிலேயே அதிக செலவில் தயாரிக்கப்பட்டு சாதனை படைத்த டைட்டானிக் மற்றும் அவதார் திரைப்படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் 1954ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி கனடாவின் ஒன்டாரியோ மாநிலத்தில் பிறந்தார்.


ஜேம்ஸ் பிரான்சிஸ் கேமரன் (James Francis Cameron) [1]கனடாவைச் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், மற்றும் ஆழ் கடல் ஆராய்ச்சியாளர் ஆவார்.


1984ஆம் ஆண்டு வெளிவந்த இவரது டெர்மினேட்டர் என்ற ஆங்கிலத் திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. இது பெரிய அளவில் வெற்றி பெற்றது.


1986 இல் ஏலியன்ஸ் எனும் திரைப்படத்தை இயக்கிய பிறகு ஹாலிவுட்டில் பிரபலமான இயக்குநர் மற்றும் எழுத்தாளர் ஆனார்.


1991 இல் டெர்மினேட்டர் 2:த ஜட்ச்மண்ட் டே எனும் இவர் இயக்கியத் திரைப்படம் சிறப்பு விளைவிற்காகப் பாரட்டப்பட்டது. 1997 இல் டைட்டானிக் திரைப்படத்தை இயக்கினார். இந்தத் திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த படத்தொகுப்பிற்கான அகாதமி விருது பெற்றது.


டைட்டானிக் திரைப்படத்தை இயக்கிய பிறகு அவதார் (2009 திரைப்படம்) எனும் அறிவியல் புனைவு திரைப்படத்தை சுமார் பத்து வருடங்களாக இயக்கினார். இந்தப் படம் முப்பரிமாண படிம நிலக்குறியீட்டில் எடுக்கப்பட்டது.


இந்தத் திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த படத்தொகுப்பிற்கான அகாதமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்தத் திரைப்படத்தின் வெற்றியின் மூலம் வெற்றிகரமான முப்பரிமாண படிம இயக்குநராக கருதப்படுகிறார்.


டைட்டானிக் மற்றும் அவதார் படங்களை எடுப்பதற்கு இடையிலான காலகட்டங்களில் பல குறும்படங்களை இயக்கினார். மேலும் இவர் நீருக்கடியில் உள்ளன பற்றிய விபரணத் திரைப்படம் இயக்குவது மற்றும் வெகுதூரத்தில் இருந்து நீருக்கடியில் உள்ள வாகனங்களை இயக்குதல் போன்ற தொழில்நுட்பங்களில் பங்காற்றினார்.


மார்ச்சு 26, 2012 அன்று உலகின் மிக ஆழமான கடற்பகுதியான மரியானா அகழியின் 11 கிமீ ஆழத்திலுள்ள அடிப்பகுதிக்குத் தனியொரு ஆளாகச் சென்று திரும்பி சாதனை படைத்தார்


ஜேம்ஸ் கேமரன் இயக்கியத் திரைப்படங்கள் வட அமெரிக்காவில் சுமார் $2 பில்லியன் வசூலையும் , உலகம் முழுவதும் சுமர் $6 பில்லியன் வசூலையும் பெற்றுத் தந்தது.


கேமரனுடைய டைட்டானிக் மற்றும் அவதார் ஆகிய திரைப்படங்கள் முறையே $2.19 பில்லியன், $2.78 பில்லியன் வசூலைப் பெற்றது. இது வரை வெளியான திரைப்படங்களில் உலக அளவில் அதிக வசூலைப் பெற்றது இந்தத் திரைப்படங்களே ஆகும்.


2011 இல் வனிட்ட்ய் ஃபேர் எனும் இதழானது ஹாலிவுட்டில் அதிக சம்பளம் பெறும் இயக்குநராக (திரைப்படம்) இவரை அறிவித்தது. 2010 இல் சுமார் $257 மில்லியன் வருமானம் ஈட்டினார்.


அக்டோபர், 2013 இல் வெனிசுவேலாவில் புதிதாக கண்டறியப்பட்ட தவளைக்கு திரைத்துறையில் இவர் செய்த சாதனையைப் பாராட்டும் விதமாக இவரின் பெயரையும் சேர்த்து பிரிஸ்திமந்திஸ் ஜேம்ஸ் கேமரூனி எனப் பெயரிட்டனர்


இவர் 1997ஆம் ஆண்டு இயக்கி வெளியிட்ட டைட்டானிக் திரைப்படத்திற்கு 11 ஆஸ்கர் விருதுகள் உட்பட பல விருதுகள் கிடைத்தன.


 
தொகுப்பு மோகனா  செல்வராஜ்